India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவையில் தனியார் கட்டுமான மற்றும் முதலீட்டு நிறுவனம், அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், உரிய ஆவணங்களுடன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து புகாரளிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. (SHARE)

கோவை மாவட்டத்தில் இன்று (11.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்து 44 மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக அரசு வழங்குவது சத்துணவா அல்லது விஷ உணவா?” என தனது ‘X’ தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினாலும், அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கவே நெஞ்சம் பதறுவதாக அவர் வேதனையை பகிர்ந்துள்ளார்.

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <

கோவை கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் வாந்தி, மயக்கமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்; இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் EPS தனது X தள பக்கத்தில் பள்ளி குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உணவைக்கூட வழங்க முடியாத திமுக அரசு, இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்.

மதுரையை சேர்ந்த முத்து சங்கையா(26), கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தனது டூவீலரில் சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில் தடுமாறி கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கியது. உயிரிழந்தார். சிங்காநல்லூர் கிழக்கு போக்குவரத்து போலீசார் பஸ் டிரைவர் இளங்கோ மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று காவல்துறையினர் (ம) அதிவிரைவுப் படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது. பதற்றமான இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, பொதுமக்களிடையே நம்பிக்கையை விதைப்பதோடு, சமூக விரோத செயல்களை தடுக்கவும் உதவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்ய மத்திய பாதுகாப்புப் படையினரின் (CAPF) கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் CRPF, RAF உள்ளிட்ட 150 வீரர்கள் 2.7 கி.மீ தூரம் அணிவகுத்துச் சென்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.