India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 மக்களவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு மண்டல மாவட்டங்களில் 20,500 போலீஸாா் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனா்” என தெரிவித்தார்
கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கோவை மாவட்டத்தில் மக்களவை தோ்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதன்பின், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என அனைத்து கட்சியினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரசாரத்துக்காக வெளியூா்களில் இருந்து வந்தவா்கள் மாவட்டத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
நாளை தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை ஆதார் அட்டையுடன் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளை கட்டணமின்றி அழைத்துச் செல்ல அரசு டவுன் பஸ் ஊழியர்களுக்கு கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவையில் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ராமா் படத்துடன் தாமரை சின்னத்தை அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருப்பதாக நேற்று பறக்கும் படையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற பறக்கும் படையினர் பாஜகவினரிடமிருந்து தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட ராமா் படங்களை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆனைமலை – தாத்தூர் சாலையில் 100க்கும் அதிகமான புளிய மரங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துகள் அதிகம் நடைபெறுவதாக கூறி இந்த சாலையோர புளிய மரங்களை வெட்டுவதற்கு திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஏப்ரல் 17) முதல்வர் ஸ்டாலினுக்கு, நெடுஞ்சாலை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கு பொள்ளாச்சி தபால் நிலையத்திலிருந்து மனு அனுப்பினர்.
கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ மக்களவை தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க தொழிலாளர் துறையால் மாவட்ட பொறுப்பு அதிகாரி காயத்ரி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
அன்னூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற திமுக நிர்வாகியை பறக்கும் படையினர் (ஏப்ரல். 17) இன்று பிடித்தனர். அன்னூர் பேரூராட்சி குமரன் நகர் பகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பணத்தை பறிமுதல் செய்து திமுக நிர்வாகியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(34). இவரது வீட்டின் அருகே ஜோஸ்வா ஜோசப் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடை முன் இருந்த குப்பையை மணிகண்டன் அகற்றக் கூறியதால் ஆத்திரமடைந்த ஜோஸ்வா ஜோசப் வீட்டில் வளர்க்கும் நாயை ஏவி மணிகண்டனை கடிக்க வைத்துள்ளார். இதில், காயமடைந்த மணிகண்டன் அளித்த புகாரில் ஜோஸ்வா ஜோசப் மற்றும் அவரது தந்தை தேவராஜை போலீசார் கைது செய்தனர்.
கோவை நகரில் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை நகர போலீசார் 2763, ஊர் காவல் படையினர் 1150, தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் 300, துணை இராணுவத்தினர் 350 என மொத்தம் 4563 பேர் கோவை நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், அதிவிரைவு படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருப்பர் என கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.
சூலூர் சிந்தாமணி புதூரை சேர்ந்த தம்பதி பெருமாள் சாமி – ஈஸ்வரி. இத்தம்பதிக்கு இளமாறன்(13), கபிலன் உள்ளிட்ட இரு மகன்கள் உள்ளனர். நேற்று ஈஸ்வரியும் , பெருமாள் சாமியும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் இளமாறன் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.