India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் விஜயகுமார் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த ஒன்றரை கோடி பணம், மற்றும் 9 சவரன் நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவத்தில் வீடு புகுந்து திருடிய குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். அவ்வாறு உரிய நடவடிக்கை எடுத்த காவலர்களுக்கு இன்று எஸ்.பி பத்ரி நாராயணன் பாராட்டினார்.
கோவை மாவட்டத்தில் கனமழை அதிகம் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வெள்ளம் சார்ந்த இயற்கை இடர்பாடுகள் நடந்தால் பொதுமக்களை மீட்க, 31 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் இன்று கோவைக்கு வந்தனர். இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் பொதுமக்கள் பேரிடர் மேலாண்மை உதவி எண் 1077 அழைக்க உத்தரவிட்டுள்ளனர்.
தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக (மே.21) நாளையும் மேட்டுப்பாளையம் – ஊட்டி, ஊட்டி – மேட்டுப்பாளையம் என இரு மார்க்கமாகவும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக பலரும் பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்ததை தொடர்த்து அவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த நிலையில் இன்று கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் ஜாமின் வழங்க மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை 27 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் செல்போன் மூலம் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. என கோவை மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு வாழ்கிறது – தெற்கு தேய்கிறது’, ‘ஆரியம் – திராவிடம்’, ‘இந்தி தெரியாது போடா’ என பிரிவினை சித்தாந்தத்தை விதைப்பதை திமுக தான். இந்து மதம்-இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி, காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளை அழைத்த கோவை கலெக்டர் கிராந்திகுமார் கடந்த வாரம் ஆலோசனை நடத்தி அனுமதியற்ற கட்டிடங்களை இடிக்க கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான உயர்மட்டக்குழு விரைவில் அமைக்கப்படவுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து இந்த குழு தன் பணியைத் துவக்கும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த மே.1 முதல் மாவட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 பேர் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து இதுவரை 70.710 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.