India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் நேற்று (ஏப்.29) 103.64 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கோவை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
கோவையிலிருந்து ஏப்.30ம் தேதி காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் சென்னை செல்லாமல் காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில், அதே நாளில் சென்ட்ரலுக்கு பதிலாக காட்பாடியிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கோவை வந்தடையும் என இன்று (ஏப்ரல்.30) சேலம் கோட்ட ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த நிதி ஆண்டில்(2023-24) தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டிய 100 ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 1216 கோடி வருவாய் ஈட்டி முதலாவது இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும், 564 கோடி வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்தில் எழும்பூர் ரயில் நிலையமும், 325 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி மூன்றாவது இடத்தை கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது என்று ரயில்வே துறை அதிகாரிகள் இன்று கூறினர்.
கோடை விடுமுறை நாட்களில் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு கோவை, திருப்பூர் சேலம் வழியாக மங்களூரு-பரெளனி இடையே வாராந்திர கோடைகால சிறப்பு ரயில்கள் கோடைகால சிறப்பு ரயிலாக மே.08ஆம் தேதி முதல் ஜூலை.03ஆம் தேதி வரை 23.45 மணிக்கு பரௌனி ஜன்னிலிருந்து புறப்படும் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு மங்களூரு சென்ட்ரலைச் சென்றடையும் என இன்று தெரிவித்துள்ளனர்.
கோவை காரமடையை அடுத்த சிக்காரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட திருமா நகர் பகுதியில் இன்று (ஏப்ரல்.29) 40க்கும் மேற்பட்ட குடிசைகள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இது குறித்து காரமடை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் எம்எல்ஏ அலுவலகம் திறக்க வாய்ப்புகள் இல்லை. தெற்கு தொகுதியிலுள்ள 19 வார்டுகளுக்கும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஏற்படுத்தி வார்டுகளில் ஏற்படும் குறைகள் களையப்படுகின்றன. பெரிய பிரச்னையாக இருந்தால் போனில் தகவல் தெரிவிப்பர். இருப்பினும் தேர்தல் விதிமுறைகளை தளர்த்தி எம்எல்ஏ அலுவலகத்தை திறந்தால் நன்றாக இருக்கும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட நீதித்துறையில் 104 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த <
கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீ நிதி இன்று (ஏப்ரல்.29) மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில், MY V3 ஆட்ஸ் என்ற நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். இதனை தொடர்ந்து MY V3 நிறுவனத்தினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்தார்.
தென் கைலாயம் எனப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் அடிவாரத்திலிருந்து மலையேற துவங்கியுள்ளனர். அப்போது, அவர்களில் புண்ணியகோடி என்பவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை மீட்ட நண்பர்கள் பூலுவபட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கணபதி நல்லாம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 17 போ் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்காக ஜெகநாதன் (30) என்பவரது சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றனா். திருச்சி சாலையில் சுங்கம் மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 17 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காட்டூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.