India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது. அங்கு மேற்குதொடர்ச்சிமலையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அங்குள்ள 5,6,7-வது மலை உச்சியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற தடை செய்யபட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது . வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் அடையாள அட்டையை முழுமையாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் செல்போன், ஐபேட், மடிக்கணினி, போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை உள்ள எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்.
தினமணி நாளிதழ் போட்டோகிராபர் அஜய் ஜோசப் கடந்த ஞாயிற்றுக்கிழமை பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஜோசப் மறைவால் வாடும் குடும்பத்தார் மற்றும் ஊடக நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பி.ஆர்.நடராஜன் எம்பி இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் துணை ஆட்சியா் உதவி ஆணையா் (வணிக வரி) ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி 1 (குரூப் 1) இல் 90 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தோ்வு ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை அமைப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் மின் தகன மேடை அமைப்பதை எதிர்த்து சுப்பிரமணியன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் தமிழ்நாடு அரசு, ஈஷா அறக்கட்டளை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையிலுள்ள சோலையாறு அணை, ஆசியாவின் 2ஆவது ஆழமான அணை என்று கூறப்படுகிறது. இதன் கொள்ளளவு 150.20 மில்லியன் கன அடி. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ்வரும் ஒரு முதன்மையான நீர்த்தேக்கம் இதுவாகும். இதன் மிகுதி நீர் பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த அணையைப் பார்க்க சிறப்பு அனுமதி தேவை. மேலும் இந்த அணை அப்பகுதியில் புகழ்பெற்ற பொறியாளரான கே. பழனிசாமி தலைமையின் கீழ் கட்டப்பட்டது.
கோவை கொடிசியா வளாகத்தில் இரண்டாவது நாளாக இந்திய ராணுவ கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இன்று (மே.29) இந்திய ராணுவத்தில் இடம் பிடித்த பொருட்களை கண்டு ரசித்தனர். இதன் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியை ராணுவ வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தங்களது பார்வையில் வைத்திருந்தனர்.
கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் இரும்பு கம்பிகளைத் திருட முயன்றார். இதனை மருத்துவமனை காவலாளிகள் கண்டு ராஜாவை பிடித்து தாக்கினர். இதில் மயங்கி விழுந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், உட்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மணி என்பவர் உள்ளே நுழைந்து இரும்பு கம்பிகளை திருட முயன்றுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி சன் டிவி ரிப்போர்டரும் , தினமணி புகைப்பட கலைஞருமான அஜய் என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்தநிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது இழப்பு கோவை, மற்றும் பொள்ளாச்சி பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.