India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியநாயக்கன்பாளையத்தில் மறைந்த முன்னாள் எம்பி உடலுக்கு ஆளுநர் (ஜூலை.27) அஞ்சலி செலுத்தினார். பாலாஜி கார்டனில் உடல் நலக்குறைவால் மறைந்த நீலகிரி முன்னாள் எம்.பி மாஸ்டர் மாதன் உடலுக்கு ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கோவை, பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அலகுக்கு உட்பட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் (ம) பதுக்கல் சம்பந்தமான புகார் தெரிவிக்க 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் அந்த துறையில் உள்ள காவல் ஆய்வாளர் 9486045050 எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கோவைக்கு இன்று (ஜூலை. 27) வருகை தந்த மத்திய அமைச்சருக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகை தந்த சுரங்கம் மற்றும் நிலக்கரி துறை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை, கோவை விமான நிலையத்தில் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மற்றும் பாஜக மாநில, மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
கோவில்பாளையம் அடுத்துள்ள வெள்ளானைப்பட்டி ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் வீரபாண்டி ஊராட்சிக்கும், அத்திப்பாளையம் ஊராட்சி செயலர் வீரமணி அக்ரஹார சாம குளம் ஊராட்சி செயலராகவும், இரும்பறை ஊராட்சி செயலர் லட்சுமிநாராயணன் அத்திபாளையத்திற்கும், வீரபாண்டி ஊராட்சி செயலர் சுப்பிரமணி வெள்ளானைப்பட்டிக்கும் இட மாற்றம் செய்து கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஜூலை.27 முதல் ஆக.10 வரை சனிக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் கொச்சுவேலி – பரௌனி சிறப்பு ரயில் பரௌனி ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக ஜூலை 30 முதல் ஆக.13 வரை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. ரயில் கொல்லம், கோவை, காட்பாடி, விஜயவாடா, மதுப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் நின்று செல்லும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க ரூ.27.52 லட்சம் செலவு செய்யப்படது குறித்து மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், ஏப்.6ல் 50 ஏக்கர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைக்க 13 தீயணைப்பு வாகனங்களில் 182 வீரர்கள் பணிபுரிந்தனர். மேலும், 500 முதல் 600 பேர் பணியில் ஈடுபட்டனர். 3நேரமும் தரமான உணவு வழங்கப்பட்டது. இதற்கு மொத்த செலவு ரூ.27.52 லட்சம் என தெரிவித்துள்ளது.
கோவையில் ப்ளூ பேண்ட் எஃப்.எம்.எஸ்.சி.ஐ. தேசிய ரேலி சாம்பியன்ஷிப் காா் பந்தய 3ஆவது போட்டி இன்று துவங்குகிறது. போட்டியின் முதல் சுற்று சென்னையிலும், 2வது சுற்று நாசிக்கிலும் நடைபெற்ற நிலையில் கோவை எஸ்எம் அக்ரோ வளாகத்திலும், பல்லடம் கேத்தனூரிலும் ஜூலை 27, 28 ஆம் தேதிகளில் 3 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் துவக்க விழாவில் சிட்டி கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று கார்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்ப நிலை குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 33 டிகிரி வரை பதிவாகலாம் என்று தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக கோவை ஒண்டிபுதூரில் உள்ள 20.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் கிரிக்கெட் மைதானத்திற்காக 20.72 ஏக்கர் நிலத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நிலமாற்றம் செய்து மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மகளிர் திட்டத்தின் மூலம் மதி சிறு தானிய உணவகத்தினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும் உணவின் தரத்தினை சோதித்து பார்த்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.