India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 45 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பர். வரும் 3ஆம் தேதி கோவையிலிருந்து ராமேஸ்வரத்திற்கும், ஆக.4ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நேற்று கூறுகையில், இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2024-2025 பொதுப்பிரிவினருக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. 5ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (ஆகஸ்ட் 2) நடைபெறும் என்று தெரிவித்தனர்.
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று(1.8.24) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் நடைபெறவுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைக்க உள்ளார்.
கோவை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “ரீல்ஸ்” எனும் குறு வீடியோ போட்டி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் சைபர் குற்றம், போதைப்பொருள் ஒழிப்பு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய தலைப்புகளில் 45 விநாடிகள் எடுத்த பதிவிடலாம் என்று ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய அரசை கண்டித்து நாளை காலை 10.30 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரி கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இம்மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான வால்பாறை, ஆனைமலை பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு, ஆழியாறு சோலையாறு, கூலாங்கல்லாறு, அப்பர் நீரார், கீழ் நீரார், காடம்பாறை ஆகிய சுற்றுலா தளங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே, இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
எனவே இந்த எச்சரிக்கையை அடுத்து தமிழகஅரசு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவிடம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மீட்பு படை இன்று வந்தடைந்தது. கோவையில் ஒரு குழு, நீலகிரியில் ஒரு குழு முகாமிட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில், இன்று கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 102 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 3மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 79 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 20 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசக்காபாளையம் ஊராட்சியில் இன்று (ஜூலை.31 ) மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமில்
ராசக்காபாளையம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.