India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை வடவள்ளி அடுத்த சொமையம் பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் வந்து பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பள்ளியில் வைத்துள்ளதாக மிரட்டல் வந்தது. தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் போலீ என தெரியவந்தது. மேலும், இகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை கேஸ் கம்பெனி தாரஹா மஹாலில் கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் என் உயிரிலும் மேலான என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி துவங்கியது. இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கூடலூர் நகர மன்ற தலைவர் அறிவரசு மற்றும் இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி கூறியதாவது, கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிக்கு ரூ.28,000 சம்பளத்துடன் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பங்களை 16.09.2024 மாலை 5.30 மணிக்குள் அரசினர் தொழிற்பயிற்சி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவி்த்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி மூலமாக ஊரக வளர்ச்சி, பொதுப்பணித்துறையில் உள்ள உதவி பொறியாளர் காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு அண்மையில் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் வரும் ஆக.28 முதல் செப்.3 வரை நடைபெற உள்ளது. கோவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மாதிரி நேர்காணல் நடைபெற உள்ளது. விவரங்களுக்கு 93615 76081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிராந்திகுமார் நேற்று அறிவித்துள்ளார்.
மக்கள் பணியை சிறப்பாக செய்து வரும் கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி விருதை இன்று (23.8.2024).
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணுவதில் முழு மூச்சில் பணிகளை செய்து உடனுக்குடன் நிவர்த்தி செய்து வைத்ததை தொடர்த்து இன்று இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
மக்கள் பணியை சிறப்பாக செய்து வரும் கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி விருதை இன்று (23.8.2024).
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணுவதில் முழு மூச்சில் பணிகளை செய்து உடனுக்குடன் நிவர்த்தி செய்து வைத்ததை தொடர்த்து இன்று இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
➤ஆலாந்துறையில் உலா வரும் சிறுத்தை
➤ஐயர்பாடி பகுதியில் இருவாச்சி பறவைகள் அதிகரிப்பு
➤கோவையில் லிப்ட் கேட்டு செயின் பறித்த இளைஞர் கைது
➤கருமலை எஸ்டேட்டில் 3வது நாளாக நிற்கும் யானை கூட்டம்
➤கோவையில் பாலியல் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்ட்
➤மதுக்கரையில் பயிற்சி மருத்துவர் விபரீத முடிவு
➤கோவை மாவட்டத்தில் வீரதீர சாகசங்கள் புரிந்த 22 காவல்துறையினர் அண்ணா விருதுக்கு தேர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாய இலவச மின் இணைப்புகள் களஆய்வு குறித்து வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் முதன்மை செயலாளர்/ வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை வரை புதியமேம்பாலம் திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் குனியமுத்துார், மதுக்கரை, பாலக்காடு சாலைக்கு செல்லும் வாகனங்கள் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறி ஆத்துப்பாலத்தில் இறங்குமிடம் குறுகலாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் 30, 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவும் என்று தெரிவித்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடகோவை கூட்ஷெட் ரோட்டில் சந்தேகம்படும் படி, நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவரை சோதனை செய்தபோது, அவர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுதது போலீசார் அவரிடம் இருந்து 800 போதை மாத்திரை, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.