India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி கூறியதாவது: இன்று (05.09.2024) காலை 9.30 மணிக்கு வஉசி மைதானத்தில், கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின், 153வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல் ஆணையர், நாடாளுமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் என கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் நேற்று (செப்.4) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் மாஸ் கிளீனிங் தொடங்குவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி, செப்டம்பர் 2024 மாதத்திற்காக வரும் 6ஆம் தேதி அன்று நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும் என்றனர்.
கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், கடைவீதிக்கும், கவுண்டம்பாளையம் சந்திரமூர்த்தி கட்டுப்பாட்டு அறைக்கும், பீளமேடு இலங்கேஸ்வரன் உக்கடத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று பதவியேற்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூலூர், திருச்சி சாலையில் உள்ள தனியார் கார் ஷோரூமில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் உள்ள சரவணப்பட்டி, மதுக்கரை, செங்கத்துறை, எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(05.9.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், மேலெ கொடுக்கப்பட்ட துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையங்கள், 80 துணை தபால் நிலையங்கள், 97 கிளை தபால் நிலையங்களில், நடப்பாண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆக., 10ம் தேதி முதல், தேசியக் கொடி விற்பனை துவங்கியது. 14ம் தேதிக்குள், 4,000 தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டன, கோவை கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில், தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப்.21) நடைபெறவுள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டி மையம் சாா்பில் ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் நடைபெறவுள்ள முகாமில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. விவரங்களுக்கு 0422 2642388, 94990-55937 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம்.
கோவையில் 1540 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு மாதம் தோறும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்தசில மாதங்களாக சரியாக பொருட்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இப்புகார் அடிப்படையில், ஆக 30, 31ஆம் தேதிகளில் முழு நேரமும் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், இன்னும் பொருட்கள் வாங்காதவர்கள் வரும் 5ம் தேதி வரை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் அறிவித்துள்ளனர்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சிறைத்துறைக்கு சொந்தமான நிலத்தில் கிரிக்கெட் ஸ்டேடியத்தை அமைக்க தமிழக அரசின் விளையாட்டு துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இதற்கான மொத்தம் நிலத்தேர்வு 30 ஏக்கர் எனவும், இதில் மைதானம் 20.18 ஏக்கர் நிலத்தில் அமையும் எனவும், 10.18 ஏக்கரில் கார் நிறுத்துமிட வசதிகள் அமைய உள்ளது.
Sorry, no posts matched your criteria.