India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டியில் இருந்து 21 பேருடன் மினிவேன் ஒன்று இன்று காலை மேட்டுப்பாளையம் வந்துள்ளது. டிரைவர் ஆனந்த் மினி வேனை இயக்கியுள்ளார். அன்னூர் சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது டிரைவர் ஆனந்திற்கு தலை சுற்றியதில் கட்டுபாட்டை இழந்த வேன் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயற்கை முறை விவசாயம் அதிக அளவு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசாங்கம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து ஒரு லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு பெற சம்பந்தப்பட்ட வட்டார அலுவலக மாவட்ட தோட்டக்கலை அலுவலங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜயினால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் பாதிப்பு வரும் எனவும், அதிமுக ஓட்டு விஜய்க்கு சென்று விடும் எனவும், புதிய வரவுகளால் அதிமுகவிற்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றார். மேலும், சசிகலா ஓபிஎஸ் என அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாக செயல்பட வேண்டும் என்றார்.
கோவை, பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரி அருகே 9.5 ஏக்கரில் 2.66 லட்சம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பார்க்கை திறக்கவும், கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்திற்கான அடிக்கல் நாட்டவும், கோவைக்கு நவ., 4ம் தேதி தமிழக முதல்வர் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மாற்றப்பட்டு, நவ 5ல் வரும் அவர், காலை 11 மணிக்கு டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.
பெரியநாயக்கன்பாளையம் ஆனைகட்டி ஐடிஐ-யில் பட்டமளிப்பு விழாநேற்று ஆனைகட்டியில் உள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்தது. இவ்விழாவில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பட்டயங்களை வழங்கி பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ அவர்கள் பாராட்டினார். மேலும் இதில் பயிற்சி நிலைய தலைவர் ஜி. அமராவதி, ஒன்றிய கவுன்சிலர் மினி சம்பத் மற்றும் உதவி பயிற்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை பெரியகடை வீதி போலீசார் உக்கடம் ஜிஎம் நகர் ரமலான் வீதி சந்திப்பில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. இந்த நிலையில் காரில் இருந்த ஏழு பேரில் இருவர் மட்டும் சிக்கினர். ஐந்து பேர் தப்பி ஓடினர். விசாரித்ததில் பிடிபட்டவர்கள் மாதவன், சிவசுப்பிரமணியம் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை புரோசன் மாலில் கோயம்புத்தூர் விழாவின் 17வது பதிப்பை முன்னிட்டு கோவையின் பெருமைகளை விளக்கும் ‘ரிதம் ஆஃப் கோயம்புத்தூர்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் நவம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, டையு, டாமன் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ராணுவத்தில் சேருவதற்கு முகாம்களில் கலந்து கொள்ளலாம் என ராணுவத்தின் தெற்கு கட்டளையகம் அறிவித்துள்ளது.
கோவையில் தள்ளுவண்டி உணவு கடைகள் அதிகம் உள்ளன. அவர்களின் ஏழ்மையை கருத்தில் கொண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், உணவு பாதுகாப்பு உரிமம் இலவசமாக வழங்கப்படுகிறது. உரிமம் பெற வியாபாரிகள், https://foscos.fssai என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று கோவை கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 60 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.