Coimbatore

News December 6, 2024

2026-ல் விஜயின் ஆட்சி; போஸ்டர் வைரல் 

image

கோவை மாநகர் முழுவதும் விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு வெற்றி சார்பில் இளைஞரணி சார்பில் சட்ட மேதையின் 2026இல் சாணக்கியர் ஆட்சி என வசனம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று த.வெ.க தலைவர் விஜய் அம்பேத்கர் நூலை வெளியிட உள்ள நிலையில், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்து முதல் நிகழ்ச்சியாக நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.

News December 6, 2024

பாபர் மசூதி இடிப்பு தினம்: பலத்த பாதுகாப்பு

image

இன்றைய தினம் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. எனவே, நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். ரயில் பெட்டிகள், நடைமேடைகள், வாகனம் நிறுத்துமிடங்களில் சோதனை செய்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News December 6, 2024

புகாருக்கு வாட்ஸ்-அப் பண்ணுங்க!

image

கோவை எஸ்பி அலுவலகம் நேற்று மாலை விடுத்த செய்தி குறிப்பில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ, சட்டம் ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து புகாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981-81212, whatsapp எண்: 77081-00100 என்ற எண்களை அழைத்து, தயங்காமல் தகவல் அளிக்கலாம் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 6, 2024

கோவைபுதூர்: கண்காணிப்பு கேமரா அறை திறப்பு 

image

கோவை மாநகர காவல் துறை மற்றும் ஹில் வியூ அசோசியேசன் கோவைபுதூர் சார்பாக, கண்காணிப்பு கேமரா அறை திறப்பு விழா இன்று மதினா நகர் விஎல்பி காலேஜ் பின்புறம், சுமேரூ அப்பார்ட் மெண்ட் அருகில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். உடன் துணை ஆணையாளர் சரவணகுமார், துணை உதவி ஆணையாளர் அஜய்தங்கம் குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

News December 5, 2024

கோவையிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் பன்னடுக்கு வாகனம் நிறுத்த (D.B Road, Multilevel car parking) வளாகத்திலிருந்து இன்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

News December 5, 2024

நாங்கள் என்ன மனநோயாளியா? சீமான் கேள்வி!

image

கோவை ஹோப்ஸ் பகுதியில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருப்பது குறித்தான கேள்விக்கு, “மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பதை குறை சொல்ல முடியுமா? திட்டி கொண்டும் குறை சொல்லவும் நாங்கள் என்ன மனநோயாளியா? என கேள்வி எழுப்பினார்.

News December 5, 2024

கோவை, மைசூா் விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்

image

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள், நாளை நடைபெறவுள்ளது. இதனால் கோவை-சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி ரயில் மற்றும் மைசூா் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், நாளை காட்பாடி வரை மட்டுமே செல்லும். இதேபோல் கோவை நோக்கி வரும், இன்டா்சிட்டி, லால்பக் விரைவு ரயில்களும், காட்பாடியில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News December 5, 2024

கோவை: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

image

கோவை பேரூர் பட்டீசுவரசுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பேரூர் பட்டீசுவரசாமி கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் பணியிடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் வரும் 03.01.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விபரங்களுக்கு (www.hrce.tn.gov.in , https://perurpatteeswarar.hrce.tn.gov.in) சென்று தெரிந்து கொள்ளலாம்.

News December 5, 2024

ஒரே நாளில் 69 மனுக்கள் மீது விசாரணை

image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தலைமையில் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 69 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 55 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 14 மனுக்கள் மீது மே‌ல் விசாரணையும் செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

News December 4, 2024

இரவு நேரத்திலும் தொடரும் உள்ளிருப்பு போராட்டம்

image

மதுக்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணி பலன்தொகையை, கடந்த ஓராண்டாக உயர்த்தி தராத வட்டார கல்வி அலுவலரை, கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் துவங்கிய இந்த போராட்டம் இரவு ஆகியும் ஆசிரியர்கள் கலைந்து செல்லாமல் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளதால், சற்று பரபரப்பாச சூழல் நிலவுகிறது.

error: Content is protected !!