India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதில், ஆனைமலை, அன்னூர், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, சூலூர் பகுதியில் வரும் 13ஆம் தேதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (டிசம்பர்.10) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட, தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் கோவை மாவட்டத்தில், வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்தவர் ஜெகதீசன் (59). இவர் அதே பகுதியில், சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையை மூடிவிட்டு, நேற்று காலை மீண்டும் வந்து பார்த்த போது, கடையில் வைத்திருந்த, 10 சைக்கிள்கள், தீ பிடித்து எறிந்தன. பின்னர் இது குறித்து ஜெகதீசன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989 ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்த இரா.மோகன் வயது மூப்பின் காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (10.12.24) அதிகாலை காலமானார். இதனையடுத்து கோவை எம்பி கணபதி ராஜ்குமார் இன்று தனது இரங்கலை தெரிவித்தார்.
கோவை முன்னாள் எம்.பி இரா.மோகன் வயது மூப்பின் காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (10.12.24) அதிகாலை காலமானார். இதனையடுத்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்த இன்று மதியம் 1.00 மணிக்கு, திருச்சி சாலை, பழைய சுங்கம் கலைஞர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வருகை தர உள்ளார் என கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் இன்று அறிவித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர், முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர், இரா.மோகன் இன்று (10.12.2024) காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நேரில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதியம் 1:30 மணி அளவில், கோவைக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக மகளிர் தினவிழா மார்ச் 8ல் நடைபெறும் போது சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு சமூக நலத்துறை சார்பில் அவ்வையார் விருது வழங்கி, கவுரவிக்க உள்ளோம். இதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட நிர்வாகம் வரவேற்கிறது. இவ்விருதுக்கான விண்ணப்ப விபரங்களை, தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தெரிந்து கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
ஊராட்சியில் பல்வேறு வகைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கோவை சோமையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜை தகுதி நீக்கம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் 2025 ஜன.5 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் டிச.9 ஆம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை, திமுக முன்னாள் எம்.பி ரா.மோகன் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் 1980-ல் கோவை மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு மக்களவைக்கு சென்றவர். 1989-ல் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.