India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாநகராட்சியில் சாலை பணிகளுக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காந்திபுரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல சத்தி சாலையை அகலப்படுத்த ரூ.54 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் அதை தருவதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார் என்றார்.
கோவையில் இன்று (டிச.12) மட்டும் நாளை (டிச.13) தேதி வரை லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை ஆனைமலை, அன்னூர், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, சூலூர் பகுதியில்13ஆம் தேதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (டிசம்பர்.11) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (19.12.2024 முதல் 20.12.2024) வரை காகித அடிப்படையிலான பொருட்கள் உற்பத்தி குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் அலுவலக கோப்புகள், ஸ்பிரிங் கோப்புகள், நாடா கோப்புகள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இது குறித்த மேலும் விவரங்களுக்கு 86680-41185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று கூறியதாவது. “கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா என உங்களுக்கு, அழைப்பு வந்து, அதில் ஆம் என்றால், 1 ஐ அழுத்தவும், இல்லையென்றால், 2 ஐ அழுத்தவும் என்ற முறையில், தற்போது நூதனமாக மோசடி நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை சேர்ந்த 32 வயது இளைஞர் விவசாயம் செய்து வருகிறார். திருமணத்துக்காக மேட்ரிமோனியில் பதிவு செய்த நிலையில், அவருக்கு சேலத்தை சேர்ந்த பிரியா என்ற பெண் பழக்கமாகி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லை என கூறி ரூ.7.12 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று அவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலையில் உள்ள புகழ் பெற்ற மாசாணி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பெருவிழா நாளை (12.12.2024) நடைபெற உள்ளது. நாளை காலை, 7.35 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையைத் தொடர்ந்து, 8.45 மணிக்கு, மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு, 9.15 மணிக்கு, மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு மாசாணியம்மன் மூலாலய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு நாளை முழுவதும் (டிச-12) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியிலிருந்து வேட்டைகாரன்புதூர், சேத்துமடை,காளியாபுரம், டாப்சிலிப் செல்லும் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கோட்டூர்,பொங்காளியூர், மயிலாடுதுறை, பொன்னாலம்மன்துறை வழியாக செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பாக கார்த்திகை தீபம், பௌர்ணமி, மற்றும் வார இறுதி நாட்களில் (12.12.2024) முதல் (15.12.2024) வரை கோவை – திருவண்ணாமலை, வழக்கமான வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 75 சிறப்பு பேருந்துகளும், பொள்ளாச்சி- திருவண்ணாமலை 14 சிறப்பு பேருந்துகளும் சிறப்பு இயக்கமாக இயக்கப்பட உள்ளது.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி வரும் 12ம்தேதி மாலை 5:45 மணி அளவில், குமாரபாளையத்தில் அங்கன்வாடி கட்டட பணிக்கு பூமி பூஜை. மாலை 6:30 மணியளவில் செஞ்சேரிபுத்தூர் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டட பணிக்கு பூமி பூஜை. இரவு 7:30 மணி அளவில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா (ம) பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.