Chennai

News February 2, 2025

தேமுதிக ஆலோசனை கூட்டம்: பிரேமலதா அறிவிப்பு

image

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் பிப்.7ஆம் தேதி காலை 10 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது. வரும் பிப்.12ஆம் தேதி 25ஆவது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு, முக்கிய ஆலோசனைகள், கட்சியின் வளர்ச்சி குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News February 2, 2025

மருந்து ஊசி போதையால் கையே போச்சு: இளைஞர் கவலை

image

வளசரவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர், போதையினால் கைகளை இழந்து தவித்து வருவதாகவும், மனைவி 2 குழந்தைகள் தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். தாயின் பராமரிப்பில் இருக்கும் அவர், தனது 2 நண்பர்கள் போதை பழக்கம் காரணமாக இறந்துவிட்டதாகவும், மற்ற சிலர் திருமணம் முடிந்து வேறொரு பகுதியில் வசித்து வருவதாவும் கூறினார். மேலும், யாரும் போதை பழகத்திற்கு அடிமையாக வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

News February 2, 2025

ஜப்பான் ரசிகைகளுடன் TVK தலைவர் விஜய்

image

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (பிப்.1) கட்சியின் தலைவர் விஜய்யை, ஜப்பான் ரசிகைகள் சிலர் பார்க்க வந்திருந்தனர். அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ரசிகர்கள், தாங்கள் வைத்திருந்த போன், கையில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச் என்ற அனைத்திலும் விஜய்யின் போட்டோவை வைத்திருந்ததை காட்டி விஜய்யை நெகிழ வைத்தனர்.

News February 2, 2025

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்

image

பட்டினப்பாக்கத்தில் 13 வயது சிறுமி கடந்த 25ஆம் தேதி தனது நண்பரைச் சந்திக்க வந்தபோது பிரச்னை ஏற்பட்டதால், அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் உதவி கேட்டுள்ளார். உதவ வேண்டிய மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன், சிறுமியை போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் இறக்கிவிட சென்றபோதும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

News February 2, 2025

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் படத்திற்கு ஆளுநர் மரியாதை 

image

விடுதலைப் போராட்ட வீரர்களில் முதன்மையானவரும், சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டி ராஜ் பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமசாமி ரெட்டியார் திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

News February 2, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (01.02.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 1, 2025

போதைப் பொருள் விற்ற நபர்கள் கைது

image

சைதாப்பேட்டை பகுதியில், கல்லூரி மாணவர் ஒருவர் போதைப் பொருள் விற்பதாக, காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நளீன் பாசித் (20), அன் ரியன் சோனிக் (19), மிக்கன் (20), அயான்கான் (24) மற்றும் மாயூர் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளிலிருந்து, 51 கிராம் கொக்கைன், 850 கிராம் கஞ்சா, மூன்று கிராம் ஓஜி கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News February 1, 2025

ஜனவரியில் 86.99 லட்சம் பயணிகள் பயணம்

image

01.01.2025 முதல் 31.01.2025 வரை மொத்தம் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஜனவரி 10, 2025 அன்று 3,60,997 பயணிகளுடன் அதிகபட்ச பயணிகள் ஓட்டத்தைப் பதிவு செய்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இப்போது CMRL வாட்ஸ்அப் டிக்கெட் அமைப்பு (+91 83000 86000) மூலம் பதிவு செய்யலாம்.

News February 1, 2025

சிங்கார சென்னை அட்டை மூலம் 25,30,950 பேர் பயணம்

image

2025 ஜனவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 23,78,989 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,800 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,219 பயணிகள், QR Code பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,80,386 பயணிகள் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 25,30,950 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

News February 1, 2025

சென்னையைச் சேர்ந்த திருடர்கள் ராசிபுரத்தில் கைது

image

சென்னையைச் சேர்ந்த, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கும்பல் ராசிபுரத்தில் பிடிபட்டது. பல திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட சென்னையைச் சேர்ந்த டேவிட் (24), மணி, திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் (47) மூவரும் பிடிபட்டனர். கைது செய்யும்போது டேவிட், மணிகண்டன் இருவரும் தப்பி ஓடுகையில் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!