Chennai

News February 3, 2025

சென்னையில் நாளை மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் நாளை (பிப்.4) பல இடங்களில் மின்பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக, புழல், சூரப்பேட்டை, ரெட்ஹில்ஸ், காவாங்கரை, கதிர்வேடு, புத்தகரம், போரூர், காட்டுபாக்கம், செம்பியம், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, ஜிஎன்டி சாலை, பிபி சாலை, பெரம்பூர், கொடுங்கையூர், மாதவரம், பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், பல்லவா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

News February 2, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 2, 2025

சென்னையில் இன்று ஒரே நாளில் 14 பேர் கைது

image

பெருநகர சென்னை காவல்துறை சார்பாக, திரு. வி. க. நகர் போலீசார், கடையில் இருந்த நபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை எடுத்துச் சென்ற நபர், பெரியமேடு போலீசார், குட்கா பாக்கெட்டுகள் வைத்திருந்த 2 நபர்கள், மடிப்பாக்கம் போலீசார், இன்வெர்ட்டர் பேட்டரியை திருடிச் சென்ற 2 நபர்கள் உட்பட 14 பேரை போலீசார் அதிரடியாக இன்று கைது செய்தனர்.

News February 2, 2025

அண்ணா தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு

image

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பிப்.20ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். போக்குவரத்துத் துறையில் ஊதிய உயர்வு தேவை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேமுதிகவின் தொழிற்சங்கமும் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

News February 2, 2025

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

image

நாளை அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, முதல்வர் தலைமையில் திமுக அமைதி பேரணி நடைபெற உள்ளது. இதனால் நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்படும். காமராஜர் சாலை நோக்கி வரும் வாகங்கள் இராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தை திட்டமிட வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

News February 2, 2025

இளம்பெண்ணை தாக்கிய அதிமுக நிர்வாகி கைது

image

மெரினா கடற்கைரை நொச்சி நகரில், சட்டப்படிப்பு படித்து வரும் இளம்பெண்ணை ஆபாசமாக பேசயுள்ளார். தாக்கிய வழக்கில் அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News February 2, 2025

கைதான சந்துருவுக்கு 15 நாட்கள் சிறை

image

சென்னை ஈசிஆரில், நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்தி சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சந்தோஷ், தமிழ்குமரன், அஷ்வின், விஷ்வேஸ்வரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான சந்துருவை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது கடத்தல், பணமோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

News February 2, 2025

தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் விஜய்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, சிலை திறப்பு நிகழ்ச்சி இன்று (பிப்.2) நடைபெற்றது. முதல் ஆண்டை நிறைவு செய்து 2ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, பனையூரில் அக்கட்சித் தலைவர் விஜய் கொடியேற்றினார். தவெகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளின் சிலைகளையும் திறந்து வைத்தார்.

News February 2, 2025

காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

காசி தமிழ்ச்சங்கம் 3ஆம் ஆண்டு விழா, வரும் பிப்.15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வரும் மக்கள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – பனாரஸ் இடையே (06193) வரும் பிப்.13ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பனாரஸில் இருந்து சென்னைக்கு (06194) பிப்.19ஆம் தேதி இயக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News February 2, 2025

ECR சம்பவம்: கைதான சந்துரு வாக்குமூலம்

image

கொடைக்கானல் செல்லும்போது சுங்கச்சாவடியை எளிதில் கடந்து செல்லவே காரில் திமுக கொடியை பொருத்தினோம் என ஈசிஆர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், “என் நண்பன் சந்தோஷ் கூறியதால்தான் அந்த பெண்களின் காரைத் துரத்தி சென்றோம். பின், தவறான காரை துரத்திவிட்டோம் என உணர்ந்து மன்னிப்பு கேட்டோம். சம்பவத்தின்போது நாங்கள் யாரும் மதுபோதையில் இல்லை” என்றார்.

error: Content is protected !!