Chennai

News February 6, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு: 20,000 காலிப்பணியிடங்கள்

image

மாதவரத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 20,000+ காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News February 6, 2025

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று (பிப்.6) பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரும்பாக்கம், வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், முடிச்சூர், திருவேற்காடு, செந்தூர்புரம், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, போரூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ரெட்ஹில்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

News February 5, 2025

சென்னை- திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை தொடக்கம்

image

புதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு திருச்சியை அடையும். மீண்டும் திருச்சியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னையை அடையும். இந்த சேவை மார்ச் 22 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பயனடைவார்கள்.

News February 5, 2025

ஸ்பைடர் மேன் உடை அணிந்து வலம் வந்த நபர் கைது

image

சென்னையில் ஸ்வீட் கடை நடத்தி வரும் செய்யது அக்பர் அலி என்பவர் நேற்று இரவு (பிப்.04) அண்ணா சாலையில் ஸ்பைடர் மேன் டிரஸ் அணிந்து அங்கும் இங்கும் துள்ளி குதித்தார். அதை பார்த்த பொது மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். ஆனால் எரிச்சல் அடைந்து சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடையில் வியாபாரம் குறைத்ததால் இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.

News February 5, 2025

இலவச தையல் இயந்திரம் பெற கலெக்டர் அழைப்பு

image

அரசு சார்ந்த நிறுவனங்களில் 3 மாத தையல் பயிற்சி பெற்ற முன்னாள் படை வீரர்களின் மனைவி, அவர்களின் திருமணமாகாத மகள்களை அந்த நிறுவனத்தால் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவில்லை எனில் தையல் இயந்திரத்தை பெற சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 22350780 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News February 5, 2025

நடைமுறைக்கு வரும் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம்

image

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இன்று  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News February 5, 2025

GBS குறித்து அச்சப்பட வேண்டாம்

image

GBS நோய் குறித்து அச்சப்பட வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொரோனாபோல தொற்றுநோய் பாதிப்பு இந்த நோய்க்கு இல்லை. சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமடையலாம். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டனர். வேறு சில பாதிப்புகளால் ஓரிருவர் உயிரிழக்கிறார்கள். அதன்படி, திருவள்ளூர் மைதீஸ்வரனுக்கு அவரது உடலில் ஜிபிஎஸ் நோயுடன் இதய நோயும் ஏற்பட்டதால் அவரை காப்பாற்ற முடியாமல்போனது .

News February 5, 2025

GBS நோய் என்றால் என்ன?

image

GBS நோய் என்பது பாக்டீரியா / வைரஸால் ஏற்படும் பாதிப்பாகும். தரமற்ற உணவு, மாசுபட்ட நீர், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள், தடுப்பூசியால் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் முதலில் ஏற்படும். பிறகு நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதனால் மூட்டு வலி, முதுகு வலி, கை, கால்கள் மரத்து போதல், மூச்சு விடுதலில் சிரமம், பேசுவதிலும் சிரமம் ஏற்படும்.

News February 5, 2025

GBS நோயால் 9 வயது சிறுவன் பலி

image

திருவள்ளூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது மகன் மைதீஸ்வரன், அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு, கால்களில் உணர்ச்சியின்மை ஏற்பட்டதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் 3 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தான். பரிசோதனையில் ‘கிலன் பா சின்ட்ரோம்’ எனும் GBS நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>

error: Content is protected !!