India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தண்டியைச் சேர்ந்தவர் சக்திவேல், (42). நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இவர், கிண்டியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு பணிபுரிந்த 25 வயதான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில், கிண்டி போலீசார் சக்திவேலை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி, நேற்று (பிப்.19) சக்திவேல் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தரணி (24), கலைவாணன் இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு ஆந்திராவில் ஒரு காரிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்னை வந்தனர். கொள்ளையடித்த பணத்தை பிரித்து கொள்வதில் இருவருக்கும் தகராறு ஏற்பட, கலைவாணன் தனது கூட்டாளிகளுடன் தரணியை ஓடஓட வெட்டி கொலை செய்தார். வழக்கு விசாரணையின்போதே கலைவாணன் உயிரிழந்துவிட்டார். மற்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை ஐ.எம்.எஸ் நிறுவனத்தில், இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பாக திட்ட உதவியாளர், ஆராய்ச்சி கூட்டாளர் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 20,000 முதல் 54,500 வரை ஊதியம் வழங்கப்படும் எனவும் விண்ணப்பிக்க பிப்ரவரி 28 கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரும்புவேர் என்ற லிங்கில் https://www.imsc.res.in/ பதிவு செய்யலாம்.
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி திருக்கோயிலில் வீற்றிருக்கும் அஷ்டலட்சுமிகளையும் வெள்ளிக்கிழமையன்று நெய் விளக்கேற்றி வணங்கினால், தரித்திரம் நீங்கி வாழ்வில் செல்வ கடாக்ஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது, கடற்கரையோரம் அமைந்திருக்கும் இந்தியாவின் சில கோவில்களில் இதுவும் ஒன்று, அஷ்டலட்சுமிகளுக்கும் புடவை சாத்துதல் இங்கு முக்கிய நேர்த்திக்கடனாக உள்ளது.
புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 712 குடியிருப்பு தாரர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (பிப்.19) வழங்கி சிறப்பித்தார். பின்னர், வீடுகளை பெற்ற மக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. அப்போது, முதல்வர் ஸ்டாலின் பிரியாணியை தனது கையால் பரிமாறி அழகு பார்த்தார். அனைவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
சென்னையில், இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சையளிக்க வேண்டும். தீவிர பாதிப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.
பிரபல இந்தி திரைப்பட நடிகரான அமீர்கானின் தாயார் ஜீனத், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.19) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகவே, ஜீனத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்கு பிறகு முழு விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Way2News App-ஐ தொடர்ந்து பாருங்கள்.
கடந்த சில நாட்களாக சென்னையில் பாலியல் வன்கொடுமை, கொலை என பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமையில் தொடங்கி தற்போது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பெண் போலீசுக்குக்கே பாலியல் அத்துமீறல் நடக்கும் அளவிற்கு மாறியுள்ளது. மறுபக்கம், பட்டப்பகலில் மர்ம கும்பலால் இருவர் வெட்டி கொலை செய்யப்படுகின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உங்கள் கருத்து?
சென்னை மண்ணடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சென்னமல்லீசுவரர் கோவிலில் மூலசாதனத்தில் சிவலிங்க வடிவில் மூலவர் எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதர், சரஸ்வதி தேவி, பால விநாயகர், முருகர், நடராசர், சனீஸ்வரர் ஆகியோருக்கு இங்கு அர்ச்சனை நடைபெறும். இங்கு வழிபட்டால் செல்வம் கொழிக்கும், நஷ்டம் நீங்கும், துக்கம் தூள் தூளாகும், கணவன் மனைவி உறவு மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Sorry, no posts matched your criteria.