India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700- 47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
சென்னை நொளம்பூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை கருங்கல்லால் உடைத்து 150 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளனர். முக்கிய பிரமுகர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வியாசர்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 960 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. முகமது ரசூல் என்பவர் வீட்டில் இருந்த செம்மரக்கடைகள் பறிமுதல் செய்த போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ரசூல் கைது செய்யப்பட்டதோடு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகராஜ், ஈஸ்வரய்யா ஆகியோர் மூலம் காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
சென்னையில் இன்று (21.02.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 28 வயதிற்குள் இருக்கும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.70,290 வரை சம்பளம். ஆர்வமுள்ளவர்கள் https://clri.org/careers.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச்.01. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஒன்பது வயது சிறுமி தூங்கிக் கொண்டிருந்த போது சிறுமியின் மாமா பாலியல் தொல்லை அளித்த புகாரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் மாமா தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.தற்கொலை சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னையில் பிரபலமாக இருக்கும் ZEPTO நிறுவனத்தில் ஓட்டேரி, பெரம்பூர், வேளச்சேரி, கே.கே.நகர், ராயப்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் Packing Groceries பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் 13,363 முதல் 16,340 (+1,000, +1,000,+4,000) வரை வழங்கப்படும், விண்ணப்பிக்க https://forms.gle/yBFqWzZm4AWwTiB58 என்ற லிங்க் அல்லது 7200652416 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.
சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தரணி (24), அவரது நண்பரான கலைவாணன் (26) ஆகிய இருவரும் கடந்த 2015 மே 14-ம் தேதி ஆந்திராவில் கொள்ளையடித்த பணத்துடன் சென்னைக்கு வந்துள்ளனர்.அப்போது கொள்ளையடித்த பணத்தை பிரித்துக் கொடுக்குமாறு கலைவாணன் கேட்க, தரணி மறுத்துள்ளார்.பணத்தை பிரித்துக் கொடுக்க மறுத்த இளைஞரை கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை கொடுங்கையூரில் நான்காம் வகுப்பு படித்து வரும் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் மீன் வியாபாரி நல்லமுத்து என்பவரை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நல்லமுத்து என்பவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Indian Army Recruitment 2025: இந்திய ராணுவம் (Indian Army) காலியாகவுள்ள 76 NCC Special Entry பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. NCC சிறப்பு நுழைவு NCC Special Entry – பணிக்கு ஆண்கள் பெண்கள் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் NCC ‘B’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.எனவே விண்ணப்பதாரர்கள் 15.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.