India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில், கொலை செய்துவிட்டு ரீல்ஸ் பதிவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகரை சேர்ந்த ராபர்ட் என்பவரை கொலை செய்த கும்பல், அதை ரீல்ஸாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து அயனாவரத்தில் ரேவதி என்ற பெண்ணை கொல்ல முயன்ற போது அக்கம் பக்கத்தினர் வந்ததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், கொலை குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில், நேற்று (பிப்.27) சுமார் 4,000 பேர் உறுப்பினர்களாக கொண்ட தமிழ்நாடு அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க வழக்கறிஞர் கீ.சுகுமார் ஏற்பாட்டில், சங்கத்தின் தலைவர் ஜானகிராமன் மற்றும் துணைத் தலைவர் நாகராஜ் தலைமையில், அச்சங்கத்தின் நிர்வாகிகள் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
பிரபல பாடகர் யேசுதாஸ் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இன்று (பிப்.27) காலை ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த தகவலை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எனது தந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவித்தார். இது ரசிகர்கள் இடையே ஏற்பட்ட குழப்பத்தை நீக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத் தொடர், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் இன்று (பிப்.27) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கேள்வி நேரத்தின்போது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், “சென்னை மாநகராட்சிக்கு எவ்வளவு கடன் உள்ளது? என கேள்வி எழுப்பினார். அதற்கு, “ரூ.3,065.65 கோடி கடனில் சென்னை மாநகராட்சி உள்ளது” என மேயர் பிரியா பதிலளித்தார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய திட்டத்தின் கீழ், தெருநாய்கள் மற்றும் மாடுகளுக்கு மைக்ரோசிப் மற்றும் கியூ.ஆர். கோடு பொருத்தும் பணி நேற்று (பிப்.26) தொடங்கியது. முதல்கட்டமாக 3,500 தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் மூலம் தெருநாய்கள் மற்றும் மாடுகளை கண்காணித்து முறையாக பராமரிப்பு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கழுக்குன்றம் அருகே அதிமுக பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டனர். அப்போது, அதிமுக சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் (27). ரவுடியான இவர் நேற்று (பிப்.26) மாலை தெருவில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 பைக்கில் வந்த முகமூடி அணிந்த 6 பேர் ராபர்ட்டை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராபர்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராபர்ட்டை கொலை செய்வதற்கு முன்பு, அயனவரத்தில் ரேவதி என்ற பெண்ணை அந்த கும்பல் தலையில் வெட்டியுள்ளனர்.
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், ‘அஸ்மிதா’ என்ற தலைப்பில் மாநில அளவிலான மகளிருக்கான ஜூனியர் ஹாக்கி போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதில், சென்னை அணி 3 – 0 என்ற கணக்கில் சேலத்தை வீழ்த்தியது. வீராங்கனைகள் ஜோதி லட்சுமி 7 மற்றும் 21ஆவது நிமிடங்களில் தலா ஒரு கோலும், பவித்ரா 46ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.
சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பெரிய சரக்கு கப்பல்கள் வருவது உண்டு. இந்த நிலையில், சென்னை துறைமுகத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 2 லட்சம் டன்னுக்கு மேல் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. துறைமுகத்தில் 20ஆம் தேதி 2,06,848 டன், 21ஆம் தேதி 2,31,416 டன், 22ஆம் தேதி 2,46,886 டன், 23ஆம் தேதி 2,31,947 டன் கையாண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.