India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணப்பாக்கத்தைச் சேர்ந்த சுதர்சன் (40) – புனிதா (37) தம்பதியர், திருச்சி லால்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். நேற்று (மார்.1) அங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, மேலவாளாடி அருகே சாலையோரம் இருந்த ஒரு நாவல் மரம் முறிந்து அவர்கள் சென்ற பைக் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இன்று (மார்ச். 01) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருவது மற்றும் நகர்மயமாக்கல் காரணமாக மண்டலங்கள் எண்ணிக்கையை அதிகாிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி புதிதாக கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, தி.நகர், விருகம்பாக்கம், பெருங்குடி – சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் மொத்தம் 86.65 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக பிப்.7ஆம் தேதி மட்டும் 3.56 லட்சம் பேர் பயணித்துள்ளனர். மெட்ரோ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் வசதிக்காக மெட்ரோ சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
திருமுல்லைவாயல், செந்தில் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை (41). கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சங்கீதா (36). இந்த தம்பதிக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களது மகன் சுதர்ஷனன் (11), கடந்த 24ஆம் தேதி இரவு வீட்டின் அருகில் உள்ள ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (பிப்.27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பரிச்சாரகர், சுயம்பாகி, அலுவலக உதவியாளர், இரவு காவலர், திருவலகு என 7 பணியிடங்கள் உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதுடையவர்கள் இதற்கு <
சென்னையில் சாரல் மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், நந்தனம், தேனாம்பேட்டை, ஆலந்தூர், மயிலாப்பூர்,ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், மாணவ, மாணவிகள் முதல் வேலைக்கு செல்வோர் வரை மழையில் நனைந்தபடியே சென்றனர். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
சென்னையில் அரங்கேறி வரும் கொலை சம்பவங்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அண்மையில் ஆவடி அருகே இரட்டை கொலை நடந்தது. நேற்று முன்தினம் அண்ணா நகர் அருகே முன்பகை காரணமாக கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவது, நேற்று அம்பத்தூர் தாசில்தார் அருகே பேட்மிண்டன் பயிற்சியாளரை கொலை செய்தது என குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
சென்னையில் இன்று (பிப்.28) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெரும் நிலையில், புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார். இவர், வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.