India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய சென்னையில் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடி காவல்துறையினர் அதிரடி காட்டியுள்ளனர். அனுமதியின்றி டாஸ்மாக் பாரில் அடுப்புகளை பயன்படுத்தி சமைத்ததாக புகார் எழுந்தது. நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்திய காவலர்கள் தரமற்ற உணவுகளை டாஸ்மாக் பார்களில் சமைத்து விற்பனை செய்ததாக 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளனர். SHARE IT.
சென்னையில், ராஜஸ்தானை சேர்ந்த தந்தை ஜெகதீஷ் சங்கலாவை (42) மகன் ரோகித்(18) இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துள்ளார். தந்தையை கொன்ற வீடியோவை மாமாவுக்கு அனுப்பி, விமான நிலையம் செல்வதாகக் கூறி தப்பியுள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை கைது செய்த ஏழு கிணறு போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் தந்தை தாயை அடித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ரோகித் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 38 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். இன்றுக்குள் (மார்.3) இந்த லிங்கை <
இந்தியாவில் எரிபொருள் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் நாணய மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறுபடும். சென்னையில் இன்று (பிப்.28) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இயற்கை எரிவாயு (CNG) 1 கிலோ ரூ.90.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநரான குப்புசாமி (39) சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில்,சாலையில் நின்றுக் கொண்டு இருக்கும் பொழுது, இவர் மீது கார் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே குப்புசாமி பலியானார்.மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் மடக்கினர்.கார் ஓட்டுநர் செல்வகுமார் (42) அதீத மது போதையில் இருப்பது தெரிய வந்தது.
திருச்சியில் வெளிநாட்டு விமானசேவைகளை மட்டுமே வழங்கிவந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸானது வரும் மார்ச் 22ம் தேதி முதல் உள்நாட்டு விமானசேவையையும் வழங்கவுள்ளது. இதன் தொடர்ச்சியாக அறிமுக சலுகையாக சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானக்கட்டணம் வெறும் ரூ.2,380, திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானக்கட்டணம் வெறும் ரூ.2,450. சாமானிய மக்களின் விமானப்பயண ஆசையை சாத்தியப்படுத்தி வந்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் வரும் செவ்வாய்கிழமை முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 589 பேருந்துகளுடன் கூடுதலாக 104 பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
சென்னை எம்.கே.பி நகரில், கஞ்சா வழக்கில் பிடிபட்ட சரித்திர குற்றவாளி அருண் பாண்டியன், போலீசாரை பட்டாக் கத்தியால் வெட்ட முயன்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு, அவரை கட்டுப்படுத்தி கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக அழைத்துச் சென்றபோது அருண் தப்பிச்சென்றார்.
சென்னையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 38 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த லிங்கை <
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் இன்று (மார்.2) 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ1 குறைந்து ரூ.100.80க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.101.80க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.