India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் நாளை (மார்ச் 6, 7) ஆகிய 2 நாட்கள் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை இயக்கப்படும் 16 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அண்ணா நகரில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு நேற்று (மார்.5) தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கேரளாவைச் சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்தனர். மேலும், 7 இளம்பெண்கள் மீட்கப்பட்டதால் போலீசாரே மிரண்டு போனார்கள். அப்பெண்கள் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னையில் ட்ரோன் பயிற்சி மார்ச் 18 முதல் 20 வரை நடைபெறுகிறது. 18 வயதிற்கு மேற்பட்டோர், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்பதிவு அவசியம். மேலும் விவரங்கள் editn.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
அண்ணாநகர் மேற்கு பஸ் டிப்போ அருகே நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக பைக்கில் இருவர் அதிவேகமாக வந்தனர். போலீசார் தடுத்து நிறுத்தியபோது, பைக்கை நிறுத்துவது போல் நடித்து வேகமாக அங்கிருந்து தப்பினர். அப்போது, சிறப்பு உதவி ஆய்வாளர் கையில் இந்த வாக்கி டாக்கியை பறித்து சென்றனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ராஜஸ்தானை சேர்ந்த வாசுதேவ், தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 24ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இந்த திட்டம் மூலம் கடந்த 8 நாட்களில் ரூ.27 லட்சத்திற்கும் மேல் மருந்துகள் விற்பனை நடந்துள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (மார்ச்.4) தெரிவித்துள்ளது. மேலும், இதன் மூலம் ரூ.7,68,766 பணத்தை பொதுமக்கள் சேமித்துள்ளதாகவும், 50,530 பேர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க, சென்னை தலைமை செயலகத்தில் இன்று (மார்.5) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக உள்ளிட்ட 56 கட்சிகள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தை, பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோடைக் காலத்தையொட்டி, குளிர்பான கடைகள் மற்றும் ஜூஸ் கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். கோடைக்காலம் தொங்கி இருப்பதால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை கடைகளில் ஆய்வு செய்து, சுகாதாரம் மற்றும் அவற்றின் தரத்தை 100% உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கோவிலம்பாக்கம் காந்திநகர் 14ஆவது தெருவில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது வீட்டில் நேற்றிரவு கேஸ் கசிந்துள்ளது. இன்று (மார்.5) காலை அவரது மனைவி ராணி சுவிட்சை ஆன் செய்தபோது, தீப்பிடித்தது. இதில், முனுசாமி, ராணி, மகள் சாந்தி, சாந்தியின் கணவர் ரகு 4 பேரும் தீயில் சிக்கிக் கதறியுள்ளனர். 4 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். 4 பேருக்கும் 40% தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். <
சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டு (2024) ரயில்களில் அடிபட்டு 1,196 பேர் உயிரிழந்துள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தை கடந்தபோது விபத்து, ரயிலில் தவறி விழுதல், தற்கொலை என சுமார் 1196 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுப்பதற்கு ரயில்வே அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இறப்பு விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.