India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வேளச்சேரியில் கடந்த 2024 மார்ச் மாதம் நடந்த தொழிலதிபர் பழனிச்சாமி கொலை வழக்கில் உத்திரகுமார் கைதாகி சிறையில் இருந்தார். சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியில் வந்தார். பழனிசாமிக்கும், உத்திரகுமாருக்கும் ரியல் எஸ்டேட் துறையில் முன்விரோதம் இருந்தது. எனவே, பழனிச்சாமி தரப்பினர் பழிவாங்கும் விதமாக உத்திரகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் உத்திரகுமாரை (35), பரமக்குடியில் நேற்று முன்தினம் (மார்.5) டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். வேளச்சேரியில் 2024 மார்ச் மாதம் நடந்த தொழிலதிபர் பழனிச்சாமி கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை பாரிமுனை தம்புச் செட்டித் தெருவில் மிகவும் பழமையான காளிகாம்பாள் கோவில் உள்ளது. இந்த தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள், காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன் படுத்தி வந்தால் பலன் கிட்டும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
சென்னையில் தற்போது போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக இருக்கும் சுதாகர் ஐபிஎஸை மத்திய அரசு பணிக்கு (அயலக பணி) மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனராக சுதாகர் IPS மாற்றப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனேஸ் ரெட்டி, ஸ்ரெயர்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 மாணவர்கள் 1 மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சூளைமேட்டில், செல்வகுமாரி என்பவர் வீட்டு குப்பையை கொட்டும்போது ரூ.1.30 லட்சம் மதிப்பிலான தனது 2 சவரன் தங்கச் செயினை குப்பையில் தவறவிட்டுள்ளார். இந்நிலையில், தூய்மை பணி மேற்கொள்ளும்போது தூய்மைப் பணியாளர் நிர்மலா அந்த தங்கச் செயினை கண்டுபிடித்து போலீசார் ஒப்படைத்தார். பின்னர், போலீசார் முன்னிலையில் செயினை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர் நிர்மலாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பெண் ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படும் பிங்க் ஆட்டோக்கள் திட்டத்தை, தமிழக அரசு கடந்தாண்டு ஜூனில் சட்டசபையில் அறிவித்தது. முதற்கட்டமாக சென்னையில் வசிக்கும் 25 – 45 வயதிற்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற 250 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, அரசு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பொதுமக்கள் வசதிக்காக ரேஷன் விநியோகம் மற்றும் ரேஷன் அட்டை தொடர்பாக, ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம்களை தமிழ்நாடு அரசின் உணவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில், வரும் 8ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் காலை 10 மணி முதல் 1 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
எழும்பூரில், பாலியல் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நேற்று (மார்.5) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள், “பாலியல் வன்கொடுமை, பெண் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 43,000 பேர் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.