Chennai

News March 14, 2025

கேட்ட வரங்களை தரும் நிமிஷாம்பாள் கோவில்..

image

சென்னை பாரிமுனை உள்ள அன்னை காளிகாம்பாள் கோவில் அருகில், மிக குறுகலாக ஒரு பகுதியில் தான் அன்னை நிமிஷாம்பாள் கோயில் அமைந்துள்ளது. தசமி திதியில் இந்த கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தொடர்ந்து பத்து தசமி திதி வந்து வழிபட்டால் ஐந்தாவது தசமி நிறைவடைவதற்குள்ளாகவே அன்னை பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 14, 2025

சென்னையில் பிரபல ரவுடி ரூபன் கைது

image

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரூபனை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரூபன் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் கைது செய்துள்ளனர். இவர் மீது 3 கொலை உட்பட 11 வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

News March 14, 2025

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளைஞர் பலி

image

முகப்பேரைச் சேர்ந்தவர் தனுஷ் (21), இவர் தனது பைக்கில் கலெக்டர் நகர் சாலையில் நேற்று (மார்.13) சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ரவி என்பவர் தனது மனைவி மோனிகாவுடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். திடீரென 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், தனுசுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவி, மோனிகாவிற்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 14, 2025

போலி IPL டிக்கெட்: சென்னை போலீஸ் எச்சரிக்கை

image

சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதும் ஐபிஎல் போட்டி, வரும் 23ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்குள், சமூக வலைதளங்களில் டிக்கெட் விற்பனை என வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், டிக்கெட் விற்பனையில் ரசிகர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News March 14, 2025

பட்ஜெட்: பால் தகவல் சேகரிப்பான் நிறுவப்படும்

image

2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) நடைபெற்றது. இதில், பால், பால் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பையும், நுகர்வோருக்கு ஊட்ட சத்தையும் உறுதி செய்யும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் பால் பண்ணைகளில் நவீன பால் அளவிடும் கருவிகள், பால் தகவல் சேகரிப்பான், நிலைக்காட்டி ஆகியவை நிறுவப்படும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

பட்ஜெட்: ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை

image

சென்னை ஈசிஆரில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும். மேலும், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், குறிப்பாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்றும் 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News March 14, 2025

பட்ஜெட்: ஊர்க்காவல் படையில் 3ஆம் பாலினத்தவர் 

image

2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு, ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவர்களை கொண்டு தாம்பரம் மற்றும் ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இது வரவேற்பை பெற்றள்ளது.

News March 14, 2025

பட்ஜெட்: சிந்துவெளி பண்பாட்டு அரங்கம்

image

2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அரங்கம் உருவாக்கப்படும் என்றும், கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் கொண்டு வரப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்

News March 14, 2025

தாதா சோமு துப்பாக்கி முனையில் கைது

image

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சோமு (சோமசுந்தரம்) எம்.கே. பாலன் கொலை வழக்கில் கடந்த 2001ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த அவர், 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக உருவெடுத்து தலைமறைவாகி இருந்து வந்துள்ளார். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.கே.பி.நகரில் உள்ள முல்லை நகர் பகுதியில் போலீசார் துப்பாக்கி முனையில் அவரை இன்று (மார்.14) கைது செய்தனர்.

News March 14, 2025

பட்ஜெட்: மெட்ரோ புதிய வழித்தடம்

image

சென்னை மெட்ரோ ரயிலின் 3ஆவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ திட்டங்கள் அறிவிப்பு வெளியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!