India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
சென்னையில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஏப்.14 நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. விசைப் படகுகளுக்கு மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டாா் பொருத்தப்பட்ட செயற்கை இழுவை படகுகள், நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. மேலும், மீனவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.8,000 வழங்கப்படுகிறது.
சென்னையில் இன்று (14.04.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் வெப்பக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தில் படி படியாக வெப்பம் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னை, புறநகரின் ஒரு சில பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாக கூடும் எனவும் எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி செல்லும் தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டதால் விமான நிலையத்தின் நடை மேடை ஒன்றில் இருந்து மெட்ரோ ரயில் இயக்கப்படவில்லை. விம்கோ நகர் செல்லும் ரயிலும், விமான நிலையம் – சென்ட்ரல் நோக்கி செல்லும் ரயிலும் ஒரே நடை மேடையில் இருந்து புறப்படும் என அறிவிப்பு. மெட்ரோ ரயில் தாமதமாக இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் அவதி அடைந்தனர்
சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” 13.04.2025 இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
குரூப் தேர்வுகளுக்கு திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 27ம் தேதி முதல் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு டிஎன்பிஎஸ்சி மற்றும் எஸ்.ஐ. தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. மேலும், பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், அலைபேசி (8610392275), மின்னஞ்சல் (thirumapayilagam@gmail.com) ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.