Chennai

News October 13, 2024

கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுது: அமைச்சர் விளக்கம்

image

கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுது என தவறான தகவல் பரப்புவதா என ஈபிஎஸ்க்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு வேண்டப்பட்டவர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலத்தை மீட்டு பூங்காவாக மாற்றியதால் ஈபிஎஸ்க்கு கோபம். ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது, பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

News October 13, 2024

சென்னையில் அடுத்த 4 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் அடுத்த 4 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் ஒருநாள் அதிக அளவில் மழை கொட்டித் தீர்க்கும். மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் 10,000 பேர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News October 13, 2024

உயர்கல்விக்கு மோடி ஆட்சியில் முக்கியத்துவம்: எச்.ராஜா

image

சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமரின் சித்தாந்தங்களில் பிரதானமாக கல்வி மேம்பாடு உள்ளது. மோடியின் ஆட்சிக்கு பிறகு தான், நமது நாட்டின் விசேஷ தன்மையான யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி கல்விக்கு மோடியின் ஆட்சிதான் முன்னுதாரணமாக இருந்துள்ளது. உயர்கல்விக்கு மோடியின் ஆட்சி அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

News October 13, 2024

விண்வெளி சார்ந்த வளர்ச்சிகள் அதிகரிப்பு: வினோஜ்.பி.செல்வம்

image

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வினோஜ்.பி.செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2047இல் உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா வளரும். பிரதமர் ‘எக்ஸாம் வாரியார்’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதை படித்தால், மாணவர்களுக்கு தேர்வு மீதான பயம் போகும். மன் கி பாத் மூலம் மாணவர்களிடையே பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. Ai, start up, விண்வெளி வளர்ச்சிகள் அதிகம்” என்றார்.

News October 13, 2024

நயன்தாரா ஆயுத பூஜை கொண்டாடினர்

image

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் ஆயுத பூஜை கொண்டாடினார். “தீமையை எப்போதும் வெல்லட்டும். துர்கா தேவியின் ஆசீர்வாதம், உங்கள் வாழ்வில் அமைதியையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். இந்த நல்ல நாளில், உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் மறையட்டும்” என தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு, ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

News October 13, 2024

போராட வேண்டி உள்ளது: வானதி சீனிவாசன்

image

சென்னையில் நடைபெற்ற விழாவில், வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “கல்வி என்ற மிகப்பெரிய செல்வம் மனிதனின் வாழ்க்கையில் பல மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது.
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. சாதாரண விளையாட்டு வீரர்களைவிட 2 முதல் 3 மடங்கு பாரா ஒலிம்பிக் வீரர்கள் போராட வேண்டி உள்ளது. மற்ற வீரர்களுக்கு கிடைக்கும் ஸ்பான்சர்ஷிப் இவர்களுக்கு கிடைப்பதில்லை” என்றார்.

News October 12, 2024

மீண்டும் ரயில் சேவை தொடங்கியது

image

சென்னை, கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில், விபத்துக்குள்ளான ரயில்கள் ரயில் பாதைகளில் இருந்து அகற்றப்பட்டன. இந்த நிலையில், தற்போது சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. நிஜாமுதீன் – சென்னை செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் தற்போது இயக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம் போல் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 12, 2024

ரயில் விபத்து: அனைத்து பெட்டிகளும் அகற்றம்

image

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில், தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் சற்றுமுன் அகற்றப்பட்டது. 9 பெட்டிகள் ஏற்கெனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மீதம் இருந்த 2 பெட்டிகளும் தற்போது கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டன. இன்று (அக் 12) இரவுக்குள் ரயில் பாதைகள் சீர் செய்யப்பட்டு, நாளை காலைக்குள், அன்றாட ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 12, 2024

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு காரணம் தெரிந்தது

image

கவரைப்பேட்டையில் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து நிகழ்ந்ததற்கு கவனக்குறைவே காரணம் என ரயில்வே காவலர்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக, கொருக்குப்பேட்டை ரயில்வே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் ரயிலை இயக்கியதாக விரைவு ரயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து?

News October 12, 2024

ரயில் விபத்து: துறை ரீதியான விசாரணை

image

கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக, துறை ரீதியான விசாரணை மதியம் 2 மணிக்கு தொடங்கி தற்போது விறுவிறுப்பை நடைபெற்று வருகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் ஓட்டுநர், கவரைப்பேட்டை, பொன்னேரி, ரயில் நிலைய மேலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், விபத்து எவ்வாறு நடந்தது? அதற்கான காரணங்களால் குறித்து தெரிவிக்கப்படும்.

error: Content is protected !!