Chennai

News January 2, 2026

BREAKING: வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ தவெக-வில் இணைவு

image

சென்னை வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். ஏற்கெனவே அவரது மகன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அவரும் அக்கட்சியில் இணைந்துள்ளார். ஜே.சி.டி பிரபாகர் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு 10,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

News January 2, 2026

ஆசிரியர்கள் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்

image

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நேற்றைய (ஜன.01) போராட்டத்தின்போது ஆசிரியர்கள் சிலரை காவலர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

News January 2, 2026

மத்திய கைலாஷ் மேம்பாலம் ஜன இறுதியில் திறப்பு!

image

சென்னையில் உள்ள மத்திய கைலாஷ் பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் திறப்பு விழா ஜன மாதம் இறுதியில் பொங்கல் பிறகு திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 650 மீட்டர் நீளத்தில் 60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு பணிகள் தொடங்கிய நிலையில் 2025 அக்டோபர் மாதம் முடிவடைந்து குறிபிடதக்கது.

News January 2, 2026

சென்னை: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW

image

சென்னை மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News January 2, 2026

தூய்மை பணியாளர்கள் 47-வது நாளாக உண்ணா நிலை போராட்டம்

image

அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.02) தூய்மை பணியாளர்கள் 47-வது நாளாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியின் கீழ் பணி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 2 பெண் தூய்மை பணியாளர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 2, 2026

சென்னை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 2, 2026

சென்னையில் அரசு நிறுவன எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. நண்பர்களுக்கு பகிரவும்.

News January 2, 2026

சென்னை: கேஸ் மானியம் ரூ.300 வரவில்லையா?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 2, 2026

சென்னை: +2 போதும், ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News January 2, 2026

சென்னை: மனவேதனையில் கல்லூரி மாணவன் தற்கொலை!

image

வேளச்சேரி அம்பிகா தெருவை சேர்ந்தவர் முகேஷ் (19) தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் அம்மா துபாயில் வேலை செய்வதால், பாட்டி வீட்டில் தங்கி படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் இவரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த முகேஷ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!