Chennai

News October 14, 2024

முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

image

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

News October 14, 2024

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் பரவாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் இடையே கேள்வி எழுந்தது. தற்போது, சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 14, 2024

சென்னை மக்களே ரெடியா இருங்க

image

சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரித்து 15,16 தேதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், பிஸ்கட் ஆகியவற்றைக் கையிருப்பில் வைத்திருங்கள். மெழுகுவத்தி, தீப்பெட்டி, கொசுவத்தி, குடிநீர், மருந்து மாத்திரைகள் சேமித்துக் கொள்ளுங்கள். கைபேசிகள், லேப்டாப், பவர் பேங்க் அவற்றை முழுமையான சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

News October 14, 2024

வெள்ள அபாய இடங்களில் மழைநீர் உறிஞ்சும் இயந்திரங்கள்

image

மேற்கு மாம்பலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்பதால், அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

‘உயர்கல்வியால் வாழ்வில் உயரலாம்’ நிகழ்ச்சி

image

சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், ‘உயர்கல்வியால் வாழ்வில் உயரலாம்’ என்ற ஆனந்தம் தன்னம்பிக்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல்ஆணையர் ஆர்.சுதாகர், திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் 500 மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நடிகர் சமுத்திரக்கனி, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

News October 13, 2024

சென்னையில் மழை படிப்படியாக அதிகரிக்கும்

image

நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று அளித்தார். அப்போது, “வங்கக் கடல் பகுதியில் இன்று சூறாவளி 35 முதல் 45 கி.மீ. வீசும். மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்லவேண்டாம். 15, 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று முதல் மழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும். இந்த வருடம் பருவமழையின் எதிரொலி அதிகமாக உள்ளது” என்றார்.

News October 13, 2024

பருவமழை கண்டிப்பாக வரத்தான் போகிறது: உதயநிதி

image

சென்னை ரிப்பன் கட்டிட கட்டுப்பாட்டு மையத்தில், துணை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை மக்கள் பாதுகாப்பாக இருங்கள். பருவமழை கண்டிப்பாக வரத்தான் போகிறது. அரசு சார்பிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்துத் துறை அதிகாரிகளும் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

News October 13, 2024

அடுத்த 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும்

image

சென்னையில் அடுத்த 3 நாட்களில் 47 செண்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நள்ளிரவு லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும், நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளது. நாளை 4.5 செ.மீ., நாளை மறுநாள் 26.5 செ.மீ., 16ஆம் தேதி 15.5 செ.மீ., மழைக்கு வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 13, 2024

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்: 300 வீரர்கள் தயார்

image

வடகிழக்கு பருவமழை நடவடிக்கையாக, சென்னையில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில், அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் நவீன உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மழை நீரில் மிதக்கும் பலூன்கள், விழுந்த மரங்கள் அகற்றும் இயந்திரங்கள் உட்பட அனைத்து கருவிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.

News October 13, 2024

கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுது: அமைச்சர் விளக்கம்

image

கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுது என தவறான தகவல் பரப்புவதா என ஈபிஎஸ்க்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு வேண்டப்பட்டவர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலத்தை மீட்டு பூங்காவாக மாற்றியதால் ஈபிஎஸ்க்கு கோபம். ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது, பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

error: Content is protected !!