Chennai

News October 15, 2024

எங்கும் மின்தடை ஏற்படவில்லை: உதயநிதி

image

சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சென்னையில் சராசரியாக 4.6 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மழைவிட்ட ஒரு மணி நேரத்தில் தேங்கியநீர் அகற்றப்படுகிறது. எங்கும் மின்தடை ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

News October 15, 2024

பருவமழை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளது

image

சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் மட்டும் 300 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி 631 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழை பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார்கள். தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. 13,000 தன்னார்வலர்கள் சென்னையில் உள்ளனர்” என்றார்.

News October 15, 2024

சென்னையில் 300 நிவாரண முகாம்கள் தயார்

image

கனமழை காரணமாக, சென்னையில் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாம்களிலும் சுமார் 1,000 பேர் தங்கக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களில், தண்ணீர், பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. 20 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து இடையூறு இல்லை என துணை முதல் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயப்பட வேண்டாம்.

News October 15, 2024

6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்

image

சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று நீல வழித்தடமான சென்னை விம்கோ நகர் – விமான நிலையம் வரை 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும், சென்னை வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில், பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

உதவி எண்களை அறிவித்த தெற்கு ரயில்வே

image

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் பாதுகாப்பு உதவி எண்களை அறிவித்துள்ளது. 1. 044-25330952, 2. 044-25330953 ரயில் புறப்பாடு மற்றும் வருகை பற்றிய தெளிவுபடுத்தல்களுக்கு பயணிகள் மேற்கண்ட ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

சென்னை முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை

image

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை பொழிவு என்பது வெளியாகி உள்ளது. அதன்படி, (மி.மீ) திருவொற்றியூரில் 51, மணலியில் 84.3, ராயபுரத்தில் 62.7, கத்திவாக்கம் 50.7, மாதாவரம் 47.5, அம்பத்தூர் 33.8 அளவு நேற்று ஒரே இரவில் பெய்துள்ளது. இனி வரும் காலத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

சென்னை மாநகராட்சியில் 178 உணவு கூடங்கள்

image

இன்று முதல் நாளை மறுநாள் வரை சென்னையில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் 178 உணவு கூடங்களை அமைத்துள்ளது. தேவைப்படுவோர் இத உணவு கூடங்களை பயன்படுத்தி கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை

image

சென்னையி பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்.14) இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பின்னர், நள்ளிரவுக்கு மேல் மழை பொழியவில்லை. இந்த நிலையில், இன்று (அக்.15) அதிகாலை முதல் கோடம்பாக்கம், வடபழனி, வள்ளுவர் கோட்டம், எழும்பூர், அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே, சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

சென்னையில் 8 விமானங்கள் ரத்து

image

கனமழை மற்றும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால், இன்று (அக்.15) சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, அந்தமான், டெல்லி, மஸ்கட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பலர் தங்கள் பயணத்தை ரத்து செய்ததும் முக்கிய காரணமாக உள்ளது.

News October 15, 2024

21,000 மாநகராட்சி ஊழியர்கள் தயார்

image

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நேற்று நள்ளிரவு முதல் சென்னை முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில், 21,000 மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்கள் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

error: Content is protected !!