Chennai

News October 16, 2024

10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்

image

பல்லாவரம் அடுத்த பொழிச்சூரில் உள்ள குடியிருப்பு பகுதியில், 10 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்பு வீரர்களிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்புகள், விஷ ஜந்துக்களைப் பிடிக்க 044 22200335 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

News October 16, 2024

மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் இல்லை

image

வேளச்சேரி, ராயபுரம், துறைமுகம் மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் வேண்டாம் என கூறியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். “பொதுமக்கள் அதிகமாக கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறும், அசம்பாவிதமும் ஏற்படும் என்பதற்காக காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். எனவே, காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

image

கனமழை காரணமாக, சென்னை மாநகர பேருந்துகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆவடி, அம்பத்தூரில் இருந்து கிண்டி மார்க்கமாக வரும் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி செல்லும் பயணிகள் தடம் எண் 104C மற்றும் 104CX பேருந்து சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஷேர்

News October 16, 2024

15 மண்டலங்களுக்கு நிதி ஒதுக்கிய மாநகராட்சி

image

வாங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம், மொத்தம் 2.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மின் மோட்டார் வாங்கவும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பயன்படுத்துமாறு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

News October 16, 2024

சென்னையில் இன்று 7 ரயில்கள் ரத்து

image

பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று (அக்.16) 7 விரைவு ரயில்கள் ரத்து.சென்ட்ரல் -போடி விரைவு ரயில்
2.ஜோலார்பேட்டை-சென்னை சென்ட்ரல் – ஏலகிரி ரயில்
3. சென்ட்ரல்-ஜோலார்பேட்டை ஏலகிரி ரயில்
4. திருப்பதி – சென்ட்ரல் ரயில்,
5. சென்ட்ரல் – திருப்பதி ரயில்
6. திருப்பதி – சென்னை சென்ட்ரல்
7.சப்தகிரி விரைவு ரயில் ஆகிய ஏழு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

News October 16, 2024

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, அண்ணா நகர், திருவல்லிக்கேணி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழையா?

News October 16, 2024

24 மணி நேரம் செயல்படும் ஆவின்!

image

ஆவின் தட்டுப்பாட்டை போக்க 24 மணி நேரமும் செயல்படும் எட்டு இடங்களில் ஆவின் பாலகம் செயல்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர், அண்ணாநகர், மாதாவரம், பெசன்ட் நகர், மைலாப்பூர், விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் ஈஸ்ட் ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் பாலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

புறநகர் ரயில் சேவை பாதிப்பு இல்லை

image

சென்னை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக புறநகர் பாதைகளில் ஆபத்தான நிலைக்கு கீழே தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது, ​​அனைத்துப் பிரிவுகளிலும் புறநகர் ரயில் சேவைகளில் எந்த இடையூறும் இல்லை. இருப்பினும், வானிலையின் தீவிரத்தைப் பொறுத்து, புறநகர் ரயில் சேவைகள் தாமதமாகலாம். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் பயணிகளுக்கான தொடர்பு எண்கள் அறிவிப்பு 044-25330952

News October 16, 2024

71 கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

image

சென்னை ரிப்பன் மாளிகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி:- சென்னை மாநகராட்சி சார்பில் 300 அவசர உதவி மையங்கள் தயாராக உள்ளது.2 லட்சம் உணவு பொருட்கள் தற்போது தயாராக உள்ளது. சென்னையில் 21 சுரங்கபதைகளில் 4 சுரங்க பாதைகளில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் வானிலை ஆய்வு மைய கட்டிடத்திற்கு 3 ஆயிரத்து 650 கோரிக்கைகள் வந்துள்ளது. 71 கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

News October 15, 2024

சென்னையில் 13 விமானங்கள் ரத்து

image

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மஸ்கட், புவனேஸ்வர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவிருந்த விமானங்கள் மற்றும் சிங்கப்பூர், கோவை, டெல்லி, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!