Chennai

News October 16, 2024

12 மணி நிலவரப்படி சுரங்கப்பாதைகள் விவரம்

image

மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் குறித்து மதியம் 12 மணி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து சுரங்கப்பாதைகளும் நீர் வெளியேற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டும் மழைநீர் காரணமாக மூடப்பட்டுள்ளது.

News October 16, 2024

சென்னை அருகே கரையை கடக்கும் புயல்

image

வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை (அக்.17) அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு

image

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கம் பகுதியில் 23 செ.மீ., திரு.வி.க.நகர் பகுதியில் 22.3 செ.மீ., அம்பத்தூர் பகுதியில் 22.3 செ.மீ., மணலி மலர் காலனி பகுதியில் 20 செ.மீ., புழல் மற்றும் அடையாறு பகுதிகளில் தலா 18 செ.மீ., திருவொற்றியூர், வானகரம், மாதவரம் பகுதிகளில் தலா 17 செ.மீ., பெருங்குடி, ராயபுரம், அண்ணா நகர் பகுதிகளில் தலா 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 16, 2024

அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும்

image

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக, மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக ஒரு சில வழித்தடங்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், இன்று அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் வழக்கம்போல் பேருந்துகளில் பயணம் செய்யலாம்.

News October 16, 2024

சென்னையில் மழை தொடர்பாக 4,855 புகார்கள்

image

சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக, மொத்தமாக 4,855 புகார்கள் வந்துள்ளான். 539 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், அதில் 436 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி எண்கள் மூலமாக மொத்தம் 485 புகார்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 40 புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழைநீர் புகார் இருந்தால் உடனே தெரிவியுங்கள்.

News October 16, 2024

சென்னையில் நேற்று 11 சென்டி மீட்டர் மழை பதிவு

image

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று, சென்னையில் சராசரியாக 113.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூரில் 54.7 மி.மீ., கள்ளக்குறிச்சியில் 29.6 மி.மீ., செங்கல்பட்டில் 26.2 மி.மீ., காஞ்சிபுரத்தில் 20.7 மி.மீ. கிருஷ்ணகிரியில் 16.8 மி.மீ. மழை சராசரியாக பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

News October 16, 2024

இன்றும், நாளையும் அம்மா உணவகங்களில் இலவச உணவு

image

அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 16, 2024

காவலர் குடியிருப்பில் ஆய்வு செய்த காவல் ஆணையர்

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பு மற்றும் சிறப்பு கட்டுப்பாட்டறைகள் செயல்படும் ராயப்பேட்டை ஹேமமாலினி மஹால், நந்தம்பாக்கம் பாலாஜி ரெசிடென்சி ஆகிய இடங்களுக்கு நெறி சென்று ஆய்வு செய்து மீட்பு பணியில் உள்ள காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

News October 16, 2024

சென்னை நீர் நிலைகளில் இன்றைய நிலவரம்

image

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நிலவரம்: செம்பரம்பாக்கத்தில் 35.06% நீர் மட்டுமே உள்ளது. பூண்டி – 11.30%, சோழவரம் – 13.78%, கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை – 60.60%, வீராணம் – 70.59% நீர் இருப்பு உள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 16, 2024

10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்

image

பல்லாவரம் அடுத்த பொழிச்சூரில் உள்ள குடியிருப்பு பகுதியில், 10 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்பு வீரர்களிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்புகள், விஷ ஜந்துக்களைப் பிடிக்க 044 22200335 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!