Chennai

News November 3, 2024

சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்

image

மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர், எந்தவொரு நபரையும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது என்றும், கழிவுநீரை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களின் (Sewage Tank) அறிவு புத்தகத்தில் வாகனத்தின் வகை, கழிவுநீர் அகற்றும் வாகனம் என்று பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News November 3, 2024

மதுரை, திருச்சியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்

image

இன்று (நவ.3) மதுரை, திருச்சியில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை திரும்ப வசதியாக மதுரையில் இருந்து நாளை மாலை 7.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். திருச்சியில் இருந்து நாளை இரவு 10.50 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News November 3, 2024

16 வயது சிறுமி கொலை: கணவன், மனைவி கைது 3/3

image

தீபாவளி தினத்தன்று, சிறுமி சரியாக வேலை செய்யவில்லை என நவாசும் அவரது நண்பரும் தாக்கியுள்ளனர். இதில், சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் உடலை கழிவறையில் வைத்துவிட்டு, சிறுமி கழிவறையில் தவறி விழுந்து இறந்ததாக கதை கட்டியுள்ளனர். துர்நாற்றம் வந்துவிடுமோ என ஊதுபத்தியை கொளுத்தி வைத்துவிட்டு உறவினரின் வீட்டுக்கு தப்பி சென்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News November 3, 2024

16 வயது சிறுமி கொலை: கணவன், மனைவி கைது 2/3

image

இந்த சிறுமிக்கு தந்தை இல்லை. தாய் மட்டுமே உள்ளார். குடும்ப சூழல் காரணமாக சிறுமி சென்னையில் தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட காயங்கள் சிறுமி உடலில் இருந்தன. இதனால் அவர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News November 3, 2024

16 வயது சிறுமி கொலை: கணவன், மனைவி கைது 1/3

image

அமைந்தகரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது நவாஸ். இவர், பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நிவேதிதா. இவர்களுக்கு 6 வயது குழந்தை உள்ளது. இவர்கள் வீட்டில் 16 வயது சிறுமி தங்கி வேலை செய்து வந்தார். அண்மையில் சிறுமி மர்மமான முறையில் பாத்ரூமில் இறந்ததாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் கணவன், மனைவியை கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.

News November 3, 2024

சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்

image

சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று (நவ.4) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், வியாசர்பாடி, காசா கிராண்ட் & ரிலையன்ஸ், அன்னபூர்ணா நகர், வடபெரும்பாக்கம், CMDA, ஜி.என்.டி. சாலை, 200 அடி சாலை, விபிசி நகர், தேவகி நகர், பிரகாஷ் நகர், ஐயப்பன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. <>ஷேர் பண்ணுங்க<<>>

News November 3, 2024

319 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

image

சென்னையில் கடந்த 3 நாட்களில் 319.26 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10வது மண்டலமான கோடம்பாக்கத்தில் 31.50 மெட்ரிக் டன் குப்பைகளும், குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 10.13 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகளும் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

News November 3, 2024

வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விரதம்

image

வடபழனியில் உள்ள முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.இன்று முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று முருகனை தரிசித்து சென்றனர். ஸ்பெஷல் தரிசனத்திற்கு கூட நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து முருகனை தரிசித்தனர். இதனால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

News November 2, 2024

சென்னையில் கூடுதலாக 50% தங்கம் விற்பனை

image

சென்னையில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை சற்று சுமாராகத்தான் இருந்தது என வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வழக்கமான நாட்களைவிட அன்றைய தினம் கூடுதலாக 50% விற்பனை என்றாலும், தீபாவளி அன்று எதிர்பார்த்த அளவுக்கான விற்பனை இல்லை. தங்கம் விலை ஏற்றமும் விற்பனை குறைவுக்கு ஒரு காரணம் தான்” என்று கூறியுள்ளார்.

News November 2, 2024

ராயபுரம் செல்லும் பிராட்வே பேருந்து நிலையம்

image

பிராட்வே பேருந்து நிலையத்தில் “மல்டி மாடல் இன்டகிரேஷன்” என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்க சென்னை மாநகராட்சி ரூ.823 கோடியை ஒதுக்கி உள்ளது. இதன்காரணமாக, பிராட்வே பேருந்து நிலையத்தை, தற்காலிகமாக தீவுத்திடலிலுக்கு முதலில் மாற்றம் செய்ய இருந்தது. ஆனால், தற்போது ராயபுரம் அருகே துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.