India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சென்னையில் மழையால் தண்ணீர் தேங்கவில்லை என்பது மகிழ்ச்சி. அதேநேரம், அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு சதவீதம் நிறைவடைந்துள்ளது? ரூ.4 ஆயிரம் கோடியில் எவ்வளவு சதவீதம் செலவாகி உள்ளது? என்ற தகவல்கள் முழுமையாக இல்லை” என்று தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி அக்டோபர் 22ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற உள்ளது. வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலை கல்லூரியிலும், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும், இராணி மேரி கல்லூரியிலும் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5,000 ரூ.3,000 மற்றும் ரூ.2,000 பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன.
சென்னையில் இ.பி.எஸ். செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “குறைந்த மழைப்பொழிவு ஏற்பட்ட காலகட்டத்தில்கூட சென்னையில் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் தத்தளித்ததை பார்க்க முடிந்தது. ராயபுரம், ஆர்.கே.நகர், வேளச்சேரி, பெருங்குடி, மடிப்பாக்கம், மேடவாக்கம், புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் மழைநீர் தேங்கவில்லை என கூறியுள்ளனர்” என்றார்.
அதிமுகவின் 53ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் மரியாதை செலுத்தும்போது, கட்சி நிர்வாகிகள் அடுத்த முதலமைச்சர் பன்னீர் செல்வம் தான் என்ற கோஷங்கள் உறுப்பினர்.
சென்னையில் 542 இடங்களில் தேங்கியிருந்த மழைநீரில், 531 இடங்களில் நீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டறைக்கு 7470 அழைப்புகள் வந்துள்ளன. அதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. 1,720 பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டு வரப்பட்டு 33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தும், உரிய நிவாரண வசதிகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் நேற்று மட்டும் 1,08,000 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அம்மா உணவகங்களில் விலை இல்லா உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மழைநீர் தேங்கிய பகுதிகள், நிவாரண முகாம்கள் உட்பட சென்னை மாநகராட்சி முழுவதும் நேற்று மற்றும் நேற்று முன்தினம் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பரிடம் விமான நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாத நிலையில், அவருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், அவரை விமான நிலையத்தில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரைக்கும் 25க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் செய்யப்பட்டுள்ளனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த சில நாட்களாக கூடுதலாக இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று (அக்.17) முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்று (அக்.16) பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-ஐ வானிலை மையம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்றும், அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.