Chennai

News October 18, 2024

 கலைஞர் நூற்றாண்டு பூங்கா செயல்படும்

image

மழையின் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா வரும் சனிக்கிழமை (19.10.2024) முதல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான நுழைவுச்சீட்டு https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் வாயிலாக பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

சென்னை காவலர் கீழே விழுந்து உயிரிழப்பு

image

சென்னையில் 11 வது மாடியில் இருந்து கீழே விழுந்து காவலர் பலியாகியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ஆர் ஆர் போலீஸ் ஸ்டேடியம் குடியிருப்பில் எலக்ட்ரிஷன் ஒர்க் செய்து கொண்டிருந்த போது 11ஆவது அடுக்குமாடி குடியிருப்பு மேலிருந்து தவறுதலாக கீழே இருந்த கார் மீது காவலர் செல்வகுமார் விழுந்து சம்பவ இடத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 18, 2024

மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து டிக்கெட் வசதி

image

சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் என அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பயணம் செய்ய என் சி எம் சி (National Common Mobility Card) என்ற ஒற்றை பயண அட்டையைப் பயன்படுத்தும் வசதியை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை விரைவில் அமல்படுத்தப்படும் என போக்குவரத்து துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 18, 2024

மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை: கமிஷனர்

image

சென்னை மாநகர ஆணையராக அருண் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அப்போது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து, ஆணையர் அருணுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜரான ஆணையர் அருண், எனது கருத்து மனித உரிமைகளை எந்த வகையிலும் மீறவில்லை. யாரையும் மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை” என்றார்.

News October 18, 2024

மாநகராட்சியில் அகற்றப்பட்ட குப்பைகளின் விவரம்

image

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் கடந்து 14ஆம் தேதி 4,967 மெட்ரிக் டன் குப்பைகளையும், 15ஆம் தேதி 4,585 மெட்ரிக் டன் குப்பைகளையும், 16ஆம் தேதி 4,941 மெட்ரிக் டன் குப்பைகளையும் 15 மண்டலங்களிலும் சென்னை மாநகராட்சி அகற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 18, 2024

4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் குடையை எடுத்துச் செல்லவும். மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.

News October 18, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: ஆட்சியர்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.18) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேற்று பகல் நேரங்களில் மழை பெய்யாத நிலையில், நள்ளிரவு முதல் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது. தற்போது, சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை மற்றும் ரெயின் கோர்ட் கொண்டு செல்ல்லுங்கள்.

News October 18, 2024

சென்னையில் பலத்த காற்றுடன் மழை

image

சென்னையில் நேற்றிரவு முதல் திடீரென மழை பெய்து வருகிறது. பகலில் மழை பெய்யாத நிலையில், நள்ளிரவு சுமார் 2.25 மணி முதல் அம்பத்தூர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, தேனாம்பேட்டை, வடபழனி, சோழிங்கநல்லூர், OMR சாலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை கரையை கடந்தது.

News October 18, 2024

அக்.24 வரை பேருந்து மாதாந்திர பயணச் சீட்டு பெறலாம்

image

சென்னை மாநகர பேருந்துக்கான மாதாந்திர பயணச்சீட்டு அக்.24 வரை பெறலாம் என இன்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரப் போக்குவரத்து கழகத்தில் செயல்படும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் பயண சீட்டு பெறலாம் என சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதை SHARE செய்யவும்.

News October 18, 2024

‘போதையில்லா தமிழ்நாடு’ மக்களுக்கான விழிப்புணர்வு

image

தமிழ்நாடு சார்பில் ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பாராட்டு சான்றிதழ் வழங்குவார். தங்கள் படைப்புகளை நவம்பர் 15ஆம் தேதிக்குள் tndiprmediahub@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!