India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளத்துக்கு 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. வரும் அக்.25 முதல் நவ.5ஆம் தேதி வரை, 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. சாத் பண்டிகையை முன்னிட்டு அக்.23 முதல் தமிழகம், கேரளத்தில் இருந்து டெல்லி, அகமதாபாத்துக்கு வாரம் இரு முறை ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போல, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் QR குறியீடு கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணச்சீட்டு மையங்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்த பின் UPI செயலிகளின் மூலம் பயணச்சீட்டுக்கான கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்தப்பட்டு உறுதிசெய்தவுடன் பயணச்சீட்டு வழங்கப்படும். வரிசையில் காத்திருக்க தேவையில்லை. ஷேர் பண்ணுங்க
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனால், மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால், அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் கடந்த 16 மற்றும் 17ஆம் தேதிகளில் சுமார் 14.60 லட்சம் மக்கள், அம்மா உணவகங்களில் உணவருந்தினர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, கிண்டி, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணா நகர், கோயம்பேடு, திருமங்கலம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகாலையிலும் மைலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. உங்க ஏரியாவில் நேற்று மழையா?
மெரினா லூப் சாலையில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியில் மட்டுமே இன்று(அக் 19) காலை முதல் மீன் வியாபாரிகள் மீன் விற்பனை செய்ய வேண்டும். எனவே, பொதுமக்களும் நவீன மீன் அங்காடி வளாகத்திற்குள் மட்டுமே மீன்களை வாங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இதனை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அப்போது, “ரௌடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்” என தெரிவித்தார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து, ஆணையர் அருணுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், காவல் ஆணையர் அருண், தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியானது போலியான தகவல் என தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை, டிடி தமிழ் அலுவலகத்தில் இன்று (அக்.18) இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ‘திராவிட நல் திருநாடும்’ வரியை விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஏற்பட்ட தவறுக்கு வருத்தம் தெரிவித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று டிடி தமிழ் குழுவுக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மழையின் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா வரும் சனிக்கிழமை (19.10.2024) முதல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான நுழைவுச்சீட்டு https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் வாயிலாக பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 11 வது மாடியில் இருந்து கீழே விழுந்து காவலர் பலியாகியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ஆர் ஆர் போலீஸ் ஸ்டேடியம் குடியிருப்பில் எலக்ட்ரிஷன் ஒர்க் செய்து கொண்டிருந்த போது 11ஆவது அடுக்குமாடி குடியிருப்பு மேலிருந்து தவறுதலாக கீழே இருந்த கார் மீது காவலர் செல்வகுமார் விழுந்து சம்பவ இடத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.