India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டானா புயல் காரணமாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதிகளில் நிலைய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று ‘டானா’ புயலாக உருவெடுக்க உள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக்.25ஆம் தேதி ஒடிசா பூரி – சாகர் தீவு இடையே கரையை கடக்கும்.
பெண்கள் பாதுகாப்பிற்காக இயக்கப்பட உள்ள இளஞ்சிவப்பு ஆட்டோக்களில் காவல்துறை உதவி எண்ணுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும்; 250 பெண்களுக்கு சிஎன்ஜி, ஹைபிரிட் ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தின் கீழ் தகுதி உடைய மகளிர் நவம்பர் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஜூலை முதல் அக்டோபர் 19 வரை சென்னையில் 2,708 மரங்களின் 48,664 கிளைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
நூற்றாண்டு பழமையான சைதாப்பேட்டை காய்கறி மார்கெட் ₹24 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. 1 ஏக்கர் பரப்பளவில் புனரமைக்கப்பட உள்ள மார்கெட்டில் பார்க்கிங், காய்கறிகளை ஏற்றி, இறக்கும் இடங்கள், கழிவறைகள், அகலமான பாதை ஆகிய வசதிகளுடன் 200 கடைகள் அமைக்க திட்டம். 2026ஆம் ஆண்டுக்குள் இதற்கான பணிகளை முடிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை முகாம் அலுவலகத்தில், தாய்லாந்து நாட்டில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள World Ability Sports Youth Games 2024-இல் பங்கேற்கவுள்ள, மாற்றுத்திறனாளி வீரர் – வீராங்கனையர் அமுல்யா ஈஸ்வரி, வருண் சந்தானம், இன்பத்தமிழி, வெண்ணிலா, சஞ்சய்குமார் ஆகியோருக்கு தலா ரூ.1,67,700 வீதம், மொத்தம் ரூ.11,73,900க்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
பெருநகர சென்னை மாநகராட்சி மாதாந்திர பணிகள் குழு ஆலோசனை கூட்டம் இன்று சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழையின் போது மாநகராட்சியின் சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மக்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை. இத்தகைய சூழலில் பணியாற்றிய மாநகராட்சியின் அலுவலர்களுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி தெற்கு ரயில்வே புதிய வேண்டுகோளை விடுத்துள்ளது. அதன்படி, பயணிகள் தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு, பட்டாசுகளையோ, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையோ எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத விபத்துக்களை ஏற்படுத்த கூடும் என்பதால் பயணிகள் கண்டிப்பாக பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்நிலையில், தீவுத்திடலில் 50 பட்டாசுக் கடைகளில், 46 கடைகள் பட்டாசு விற்பனையாளர்களுக்கும், மீதமுள்ள 4 கடைகள் கூட்டுறவு சங்கத்தினருக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்புவின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. காசிமேடு ரவுடி வீரராகவனை, நீதிமன்ற பிடி வாரண்டில் கைது செய்தபோது, அவரிடமிருந்து 7.65 MM துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களுடன் வழக்கறிஞர் மூலம் காசிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. துப்பாக்கி ரவுடி புதூர் அப்புக்கு சொந்தமானது என, ஆயுதத் தடைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.