India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திரு.வி.க.நகர் கிருஷ்ணதாஸ் சாலையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமை பார்வையிட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், கர்ப்பிணி தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.
சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “மக்களால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் திமுக கூட்டணி விரைவில் உடைய போகிறது என்று இவ்வளவு நாள் கற்பனையில் பேசியவர் தற்போது ஜோசியராக மாறி உள்ளார். விரக்தியின் எல்லைக்கு சென்றுள்ளார். திமுக கூட்டணி கொள்கைக்காக இணைந்த கூட்டணி. விவாதங்கள் கூட்டணிக்குள் இருக்கலாம், விரிசல் இல்லை” என்றார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்கிறது. இதன் காரணமாக இன்று (அக்.23) காலை 8 மணி முதல் நாளை (அக்.24) மாலை 4 மணி வரை தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. இதில் பயன்பெற, 10ஆம் வகுப்பு முடித்து, 25-45 வயது வரையிலான ஓட்டுநர் உரிமம் உள்ள பெண்கள், விண்ணப்பங்களை ‘சமூக நல அலுவலர், 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை’ என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் பெற்று, நவ.23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது. தீபாவளி நெருங்கும்போது, வியாபாரிகள் அல்லது பயணிகள் சிலர் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். இதை தவிர்க்க கோரி, ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதுபோல, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் இந்த ஏலம் நடைபெற உள்ளது. ஏலம், நாளை (அக்.24) மாலை 3 மணிக்கு நடைபெறும்/ ஏலம் எடுப்பவர்கள் நாளை மாலை 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடசென்னை ஐ.டி.ஐ.,யில் சேர வரும் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமா படித்தவர்கள் பயிற்சியில் சேரலாம். சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிரோன் பைலட் உள்ளிட்ட ஓராண்டு மற்றும் 2 ஆண்டு பயிற்சிகள் உள்ளன. பயிற்சியின்போது, உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பயிற்சியில் சேர பயிற்சி கட்டணம் கிடையாது. விபரங்களுக்கு, 98941 92652, 94990 55653 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு, இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து, வேளச்சேரி ரயில் நிலைய அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், ரயில் நிலையத்தில் மோப்பநாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், ரயில் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் அறையில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்தியலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதன் அடிப்படையில், இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டானா புயல் எதிரொலி காரணமாக 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நண்பகல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சந்திராகச்சி செல்லும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை சென்னையில் இருந்து ஹவுரா செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.