Chennai

News October 24, 2024

குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI கேமரா

image

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ. 18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் பெருமளவு திடக்கழிவு கொட்டுவோர் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது.

News October 24, 2024

நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், திடீரென கட்டடங்கள் முழுவதும் அதிர்ந்ததால் அரசு ஊழியர்கள் அனைவரும் தற்போது கட்டடங்களை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 10 மாடிகளை கொண்ட அந்தக் கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

News October 24, 2024

விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம்!

image

சென்னை மாநகராட்சி பகுதிகளில், பெருமளவு திடக்கழிவு கொட்டுவோர் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி சார்பில் ஆய்வுக்காக வரும்போது, குப்பை சேகரிப்பாளர்கள் அல்லது மறுசுழற்சி செய்பவர்கள் மூலம் குப்பைகள் அகற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் காண்பிக்க வேண்டும். உரிய விதிகளைப் பின்பற்றாமல் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

குடிநீரில் 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா

image

சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் சென்னை மக்கள் குடிக்கும் நீரை ஆய்வு செய்தனர். இதற்காக சென்னைப் பகுதிகளிலிருந்து 752 வீடுகளில் உபயோகிக்கப்படும் நீரினை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா கலந்து இருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர். இது, டயரியாவை ஏற்படுத்துக் கூடியது என்பதால் கொதிக்க வைத்து குடிப்பது சிறந்ததாகும். ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

விரைவில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாத சோதனை ஓட்டம் 

image

பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் வரும் 26ஆம் தேதி தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது.

News October 24, 2024

மக்கள்தொகை 10 ஆண்டுகளில் 20% அதிகரித்துள்ளது

image

சென்னை அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் என பெருநகர வளா்ச்சிக் குழும (CMDA) உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தாா். நகரை மேம்படுத்த, குடியிருப்புப் பகுதிகளை தீவிரமாகக் கவனிக்க வேண்டும். மக்கள்தொகை 10 ஆண்டுகளில் 20% அதிகரித்துள்ளது. அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, தொழிற்சாலை, ஐடி, குடியிருப்புகளை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

News October 23, 2024

சென்னையில் இன்றைய இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News October 23, 2024

வீட்டிலேயே போதைப்பொருள் தயாரித்த 7பேர் கைது

image

கொடுங்கையூரில் கல்லூரி மாணவர்கள் சிலர் வீட்டிலேயே மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் தயாரித்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை காவலர்கள் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். வெளியே வாங்கிய போதைப்பொருள் தரமில்லாததால், சௌகார்பேட்டையில் வேதிப்பொருட்கள் வாங்கி, வேதியியல் படித்து வரும் மாணவர் உதவியுடன் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News October 23, 2024

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக்டோபர் 29, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் அதிவிரைவு ரயில் இயக்கம். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அக்டோபர் 29, நவம்பர் 4 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கம். மங்களூருவில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 29ஆம் தேதி அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் ரூ.5000 அபராதம்

image

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது, ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரும் மக்களை எச்சரித்து வருகின்றனர். முதல் முறையாக பிடிபட்டால், ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என எச்சரிக்கை விடுத்தனர்.

error: Content is protected !!