Chennai

News October 27, 2024

நாளை முதல் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

image

நாளை முதல் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீப ஒளி திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து அதிகமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால், சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதாவரம் புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்து நாளை முதல் அக்டோபர் 30-ஆம் நாள் வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News October 27, 2024

மெட்ரோ திட்டத்தால் மக்கள் பயன்: முதல்வர் 

image

கடந்த 2007ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தினால் சென்னை பொதுமக்கள் மிகவும் பயன் அடைந்து வருகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார. மேலும், நாள்தோறும் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான பயணிகள் இதில் பயணம் செய்கின்றனர். இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

News October 27, 2024

சென்னையில் இருந்து 14,086 பேருந்துகள் இயக்கம்

image

போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 28, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News October 27, 2024

சென்னை – கன்னியாகுமரி சிறப்பு ரயில் இயக்கம்

image

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஞாயிறு) இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து நாளை (திங்கள்) மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூரில் அதிகாலை 3.45 வந்தடையும்.

News October 27, 2024

விஜய் மாநாட்டுக்கு சென்றவர் பலி

image

சென்னையில் இருந்து விஜய் மாநாட்டுக்கு சென்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்ளது. பெரியமேடு பகுதியில் இருந்து அந்த இளைஞர் பைக்கில் சென்றுள்ளார். டி.எம்.எஸ். அருகே சென்று கொண்டிருந்தபோது, பைக் மீது மணல் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது விஜய் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 27, 2024

குழந்தைகளின் பாதுகாப்பு ஒவ்வொருவரின் பொறுப்பு 

image

குழந்தைகள் யாரேனும் வன்முறைக்கு உள்ளாவது, பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்குவது போன்ற விஷயங்கள் உங்களுக்கு தெரியவந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது 1098 என்ற குழந்தை உதவி எண்ணையோ அழைக்கவும் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பு ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும் சென்னை பெருநகர காவல் நிலையம் நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம். ஷேர் பண்ணுங்க

News October 27, 2024

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவை ரத்து

image

பராமரிப்பு பணி காரணமாக, கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் இருமாா்க்கத்திலும் ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இருமாா்க்கத்திலும் 20 – 30 நிமிடங்கள் இடைவெளியில் 79 ரயில்கள் இயக்கப் படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின் மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை அட்டவணை படி ரயில்கள் இயங்கும்.

News October 27, 2024

5% ஊக்க தொகை தவறவிட வேண்டாம் – சென்னை மாநகராட்சி

image

சென்னை மாநகராட்சி, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான சொத்து வரியை அக்டோபர் 30க்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகையை தவறவிட வேண்டாம் என்றும், காலக்கெடு முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன என்றும் தெரிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக chennaicorporation.gov.in/gcc/online-pay… இந்த லிங்க் மூலமாக வரியை செலுத்தலாம்.

News October 27, 2024

காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

image

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் இன்று , திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மாணவர், மாணவிகளை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார். இதில், திருவெற்றியூர் தனியார் பள்ளி மாணவர்களை மீட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 27, 2024

தொண்டு நிறுவனங்களுக்கு மாநகராட்சி அழைப்பு

image

சென்னை மாநகராட்சியுடன் சேர்ந்து, சென்னையை மேலும் பசுமையாக்க விரும்புகிறீர்களா? மரம் நடுவதற்கான தன்னார்வலர்கள் உங்களிடம் இருக்கிறார்களா? CSR மூலம் உதவி செய்ய விருப்பமா? 9445190856 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!