Chennai

News November 1, 2024

இந்த தீபாவளிக்கு உங்களை மகிழ்வித்தது எது?

image

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புதுப் படங்கள் வெளியானதால், திரைப்படங்களை கண்டு ரசித்து உற்சாகமான தீபவாளியாக இம்முறை அமைந்தது. இதில், உங்களை மகிழ்வித்தது

News November 1, 2024

சென்னையில் காற்றின் தரக்குறியீடு குறைந்துள்ளது

image

சென்னையில் காற்றின் தரக்குறியீடு சராசரி 212இல் இருந்து 158 ஆக குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் உற்சாக கொண்டாடினர். காலை 6 மணி நிலவரப்படி, கொடுங்கையூர் – 106, ராயபுரம் – 113, மணலி – 87, பெருங்குடி – 234, ஆலந்தூர் – 222, அரும்பாக்கம் – 168, வேளச்சேரி – 222 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.

News November 1, 2024

நீங்களும் பூங்கா பராமரிக்கலாம்: சென்னை மாநகராட்சி

image

சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 871 பூங்காக்களில், 90 பூங்காக்கள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் தத்தெடுக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உங்களுக்கு மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க ஆர்வம் உள்ளது என்றால், 9445190856 எண்ணை தொடர்பு கொண்டு பூங்காவை தத்தெடுத்து நல்ல முறையில் பராமரிக்கலாம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 1, 2024

புதிய காற்றழுத்த தாழ்வு மையம்: சென்னைக்கு பாதிப்பா?

image

நவம்பர் முதல் வாரத்தில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக நவம்பர், டிசம்பர் என்றாலே சென்னைக்கு கண்டம் தான். தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் சென்னை குறித்த அச்சத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், மழை வெள்ளத்தை சமாளிக்க கட்டமைப்புகள் சிறப்பாக மாற்றப்பட்டு வருவதால் அச்சம் வேண்டியதில்லை.

News November 1, 2024

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாக, இன்று (நவ.1) சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 1, 2024

சென்னையில் காற்றின் தரக் குறியீடு மோசம்!

image

சென்னையில் மோசம் அடைந்த காற்றின் தரக் குறியீடு 216 ஆனது. தீபாவளியை ஒட்டி சென்னை முழுவதும் பட்டாசுகள் வெட்கப்பட்டு வருவதால் காற்றின் தரக் குறியீடு மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. குறிப்பாக பெருங்குடி, ஆலந்தூர், வேளச்சேரி, அரும்பாக்கம் ஆகிய பகுதிகள் மிகவும் மோசம் அடைந்துள்ளது.

News November 1, 2024

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 31, 2024

வெறிச்சோடி காணப்படும் தி.நகர்

image

சென்னையில் தீபாவளி பண்டிகை பொதுமக்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். எப்போதும் கூட்டம் நெரிசலுடன் காணப்படும் தி.நகர் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகள் திறந்து இருந்தாலும் இன்று காலை முதல் பொதுமக்கள் வருகை குறைவாக உள்ளது என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் நலன் கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News October 31, 2024

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை

image

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை நவ.1 விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1200க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு தினமும் 3 ஆயிரம் டன்னுக்கு மேற்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இந்த கடைகளில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

News October 31, 2024

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

image

சென்னை விமான நிலையம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆலத்தூர், மீனம்பாக்கம், கொளத்தூர், போரூர், ஆவடி, திரிசூலம், திருவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. பொதுமக்கள், தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மழை குறுக்கிட்டதால் பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!