Chennai

News January 16, 2026

சென்னை: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 16, 2026

சென்னையில் டூவீலர், கார் உள்ளதா?

image

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் <>இந்த இணையத்தளத்தில்<<>> LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 16, 2026

சென்னை: ஆட்டோவில் செல்வோர் கவனத்திற்கு!

image

சென்னையில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால்<> RTO அலுவகத்தில்<<>> புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

JUST IN: சென்னை: அ.தி.மு.க நிர்வாகி தற்கொலை!

image

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட பகுதி செயலாளர் சைதை எம்.சுகுமார் இன்று (ஜன.16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாலை 4 மணியளவில் சுகுமார் உயிரிழந்த நிலையில், உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 16, 2026

சென்னை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

சென்னையில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 16, 2026

சென்னை: உங்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. நண்பர்களுக்கு பகிரவும்.

News January 16, 2026

சென்னை: சாலை விபத்தில் IT ஊழியர் பலி!

image

சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல கிருஷ்ணன் (23) கே.கே.நகர் சாலையில் நேற்று டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி பைக் மரத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் எதிர் திசையில் வந்த டெலிவரி ஊழியர் சுரேன் பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 16, 2026

சென்னை: ஊருக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

image

போரூர் ஹெரிடேஜ் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் இளவரசன் (36) பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதியன்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரூ.13.20 லட்சம் பணம், தங்க நாணயங்கள் திருடப்பட்டன. புகாரின் பேரில் வானகரம் போலீசார், சூர்யா, முரளி, டில்லிபாபு, வாணி, யுவஸ்ரீ, ஆர்த்தி ஆகியோரை நேற்று கைது செய்து ரூ.2 லட்சம் பணத்தை மீட்டனர்.

News January 16, 2026

சென்னையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

image

மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 30 வயது பெண் சென்னை சின்னமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி அப்பெண் தங்கியிருந்த அறைக்கு சென்ற அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் ராஜ், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் பேரில், மயிலாப்பூர் போலீசார் நேற்று ராஜை கைது செய்தனர்.

News January 16, 2026

சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!