India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள், மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை ஒட்டி, பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். மேலும் சென்னையில் இருந்த மக்கள் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையையொட்டி குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரையில் திரண்டனர். மேலும், குடும்பத்துடன் போட்டோ எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குழந்தைகளும் விளையாடி மகிழ்ந்தனர்.
சென்னையில் இன்று மதியம் 12 மணி வரை 156.48 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 18.5 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்தில்குமார் (55) என்பவர், இன்று (நவ.1) காலை காட்பாடியில் இருந்து சென்னை செல்வதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடைமேடையில் ஏறாமல் எதிர் திசையில் இருந்து ஏறி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த அவர் இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு வசதிக்காக, ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தீபாவளி முடிந்து சென்னை கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்கு, 4ஆம் தேதி காட்டாங்குளத்தூர் பகுதியில் இருந்து தாம்பரம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அம்பத்தூர், பொன்னேரி, ஆவடியில் தாசில்தாராக பணியாற்றியவர் மணிகண்டன் (55). இவர், கடைசியாக கோயம்பேட்டில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலக சிறப்பு தாசில்தாராக பணியாற்றி வந்தார். தீபாவளி அன்று (அக்.31) நேற்று இரவு 7.30 மணி அளவில் அரியலூர் அருகே அவரது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பலரும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள <
தீபாவளி பண்டிகையை, சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர். இந்த நிலையில், பட்டாசுகளை கையில் வெடித்து வெடிக்க கூடாது பாதிப்பு ஏற்படும் வகையில் வெடிக்க கூடாது என மருத்துவத்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், நேற்று இரவு 39 தீயணைப்பு அழைப்புகள் வந்துள்ளன. இம்முறை பெரிதளவில் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு அற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சி பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கியிருந்தது. அந்த வகையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும் (1 மணி நேரமும்), இரவு 7 மணி முதல் 8 மணி வரை (1 மணி நேரமும்) நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனுமதி கொடுத்த நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்ததாக 347 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புதுப் படங்கள் வெளியானதால், திரைப்படங்களை கண்டு ரசித்து உற்சாகமான தீபவாளியாக இம்முறை அமைந்தது. இதில், உங்களை மகிழ்வித்தது
Sorry, no posts matched your criteria.