India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை – காந்தி ரவுண்டானா – பேசின் பாலம் வியாசர்பாடி புதிய பாலம் – மார்க்கெட் – முத்து தெரு வலது எருகஞ்சேரி சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம். வரும் 6ஆம் தேதி முதல் 1 வாரத்திற்கு இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும்.
‘மெட்ராஸ் – ஐ’ எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்த்தொற்றுதான். ஆனால், அதை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலந்தாழ்த்தி அலட்சியம் செய்தால் பாா்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுவிடும். கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை ‘மெட்ராஸ் – ஐ’-இன் முக்கிய அறிகுறிகளாகும். ஷேர் பண்ணுங்க
பருவநிலை மாற்றம் காரணமாக ‘மெட்ராஸ் – ஐ’ எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு சென்னையில் தற்போது பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், முதியவா்களுக்கும் அதிக அளவில் ஏற்படுவதாக மருத்துவத் துறையினா் தெரிவித்துள்ளனா். விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தீநுண்மி தொற்றுதான் ‘மெட்ராஸ் – ஐ’. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும்
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். <
தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு நேற்று காலை சென்னைக்கு வரத்தொடங்கினா். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோா் சென்னைக்குள் வந்ததால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பரனூா் முதல் வீராபுரம் வரை சுமாா் 2 கி.மீ. தூரத்துக்கு 2ஆவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சென்னை திக்கு முக்காடி வருகிறது.
சென்னை மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள், பெண்கள் விடுதிகள், சட்டப்படி பதிவு செய்யாமல் செயல்படும் விடுதிகள் வரும் 30ஆம் தேதிக்குள் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முதியோர் இல்லங்கள், https://www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் https://tnswp.com தளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயிலில், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் 90,83,996 பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக அக்டோபர் 6ஆம் தேதியன்று மட்டும், 4,00,042 பயணிகள் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 6ஆம் தேதி மெரினாவில், இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட பள்ளியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காற்று பரிசோதனை செய்யும் வாகனத்தின் மூலம் பள்ளியை சுற்றி 500 மீட்டர் தொலைவு வரை உள்ள காற்றை ஆய்வு செய்யும் பணியை தொடங்கினர். 2 நாட்கள் நடத்தப்படும் இந்த ஆய்வின் அறிக்கைக்கு பின்னரே, பள்ளி திறக்கப்படும் என தனியார் பள்ளிகள் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் வாயு கசிவு ஏற்பட்டு, 35க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். விடுமுறைக்கு பின் இன்று பள்ளி திறக்கபட்ட நிலையில், மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், தற்போது பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வாயு கசிவுக்கான காரணம் கண்டறித்த பின்னர், பள்ளி திறக்கப்படும் என்று தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.