India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை – புருனே இடையே நேரடி விமான சேவையை, பிரபல ராயல் புருனே நிறுவனம் நேற்று தொடங்கியுள்ளது. வாரத்திற்கு 3 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதன்மூலம் புருனேவுக்கு நேரடி விமான சேவை வழங்கும் ஒரே இந்திய நகரம் என்ற சிறப்பை, சென்னை பெற்றுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பீக் ஹவர்ஸில் வாகன சோதனையைத் தீவிரப்படுத்த காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். குற்றத்தடுப்பு நடவடிக்கையாக காலை 9 -11, மாலை 5 -9 ஆகிய நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். மேலும், உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்டோர் முக்கிய பகுதிகளில் வாகன சோதனை செய்ய ஆணையிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல், செல்போன் பறிப்பு, ரவுடிகளை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மகளிர் இலவச பயணத்திற்கு வசதியாக, கூடுதலாக 700 டீலக்ஸ் பேருந்துகள் பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில், பல்வேறு வழித்தடங்களில் 3,376 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு நாளும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து?
ஆவடி – சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் வரும் 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் மெமு ரயிலின் பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளது. சென்னையில் பொது போக்குவரத்து வசதிகளில் புறநகர் மின்சார ரயில் சேவை முக்கியமானதாக உள்ளது. இதில் தினசரி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இந்த சேவையை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தும்மும்போது அல்லது இருக்கும்போது வாய் மற்றும் மூக்கை துண்டால் மூடிக்கொள்ள வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். வெளியே சென்று வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாகச் சுத்தம் செய்து சானிடைசர் வைத்து துடைக்க வேண்டும். இருக்கும் இடங்களில் சரியான காற்றோட்டத்தை பராமரிக்கவும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். புகைபிடிப்பதை கட்டாயம் தவிர்க்கவும். மது அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டும்.
சென்னை அசோக் நகரில் பணிக்கு சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடிரென ஆட்டோ ஒன்று அவர் மீதுஉ மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அசோக் நகர் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பெயர் புருஷோத்தமன் (27), வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ரூ.5,000 கோடிக்கும் மேலான செலவில் 225 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ரூ.1,613 கோடியை இந்த திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவை நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில், 7 இடங்களில் நூலகங்களை ஆய்வு செய்தோம்” என்றார்.
சென்னை, கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்படும். மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் இருந்து புளியந்தோப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள், ஸ்டீபன்சன் சாலை வழியாகத் திருப்பி விடப்படும். வரும் 6ஆம் தேதி முதல் 1 வாரத்திற்கு இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும் எனக் கூறப்பட்டது.
சென்னை, கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை – காந்தி ரவுண்டானா – பேசின் பாலம் வியாசர்பாடி புதிய பாலம் – மார்க்கெட் – முத்து தெரு வலது எருகஞ்சேரி சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம். வரும் 6ஆம் தேதி முதல் 1 வாரத்திற்கு இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும்.
‘மெட்ராஸ் – ஐ’ எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்த்தொற்றுதான். ஆனால், அதை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலந்தாழ்த்தி அலட்சியம் செய்தால் பாா்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுவிடும். கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை ‘மெட்ராஸ் – ஐ’-இன் முக்கிய அறிகுறிகளாகும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.