India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை ஹையாத் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கவிருந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹையாத் நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் தங்கியிருந்த வீரர்கள் அனைவரும் பாதுக்காப்பாக வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நாகேந்திரன் உட்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கைதான 27 பேரில் 17 பேர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏர் போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் நாளை (06.08.2025) பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.பல்லாவரம் பகுதி, திருமுல்லைவாயல், ரெட் ஹில்ஸ் பகுதி, பொழிச்சலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை கண்டால் அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு சென்னையில் உள்ள தலைமை மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தொடர்புக்கு 94987-94987 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)
சென்னையில் இன்று (ஆக.6) திருவொற்றியூர், அண்ணா நகர், அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி, மாதவரம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <
திமுக தரப்பில் Ex.CM ஜெயலலிதா தொடங்கிய திட்டத்துக்கெல்லாம் ‘அம்மா’ எனப் பெயர் வைத்ததைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், அம்மா என்பது ஒரு யூனிவர்சல் சொல். அது என்ன தனிப்பட்ட நபரின் பெயரா? AMMA என்பதற்கான விளக்கத்தை ஏற்கெனவே கொடுத்திருக்கிறோம் என்றார்.
சென்னையில் தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் 300 மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கி உள்ளது. எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 நாள்கள் குப்பைகள் அகற்றப்படாமல் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் நோய் பரவ வாய்ப்பு ஏற்பட்டு, மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் நிலவுகிறது.
நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலகங்கள் (ம) மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின் அவர் பேசுகையில், சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.25 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ. 33 கோடிக்கு விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.
அம்பத்தூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது வீட்டில் 2 மாதத்திற்கு ஒருமுறை சராசரியாக 450 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2.000 வரை மின்கட்டணம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நந்தகுமார் வீட்டில் ஜூன், ஜூலை மாத கணக்கீட்டின்படி 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.91,993 மின்கட்டணம் வந்துள்ளது. இதை கண்டு அக்குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.