Chennai

News November 12, 2024

சென்னையில் இரவு முதல் பலத்த மழை

image

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னையின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.வேளச்சேரி, ஆலந்தூர் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

News November 12, 2024

குப்பை கொட்டுவதில் விதிமீறல்; ரூ.92.18 லட்சம் அபராதம்

image

சென்னையில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.92.18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் ரூ.12.53 லட்சம் வரை அபராதம் வசூலாகியுள்ளது. விதிகளை மீறி குப்பைகளை கொட்டுபவர் மற்றும் அதனை எரிப்பவர்கள் மீது டிஜிட்டல் முறையில் ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2024

சென்னையில் 18,996 மரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன

image

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில், அக்டோபர் 16 முதல் நவம்பர் 11 வரை, கனமழையின் போது ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, 18,996 மரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 1 முதல் நவம்பர் 11 வரை, நகரம் முழுவதும் விழுந்த 121 மரங்கள் அகற்றப்பட்டன. கத்தரித்தல் அல்லது அகற்றுதல் தேவைப்படும் மரத்தைக் கண்டறிய 1913 என்ற உதவி எண்ணை அழைக்கவும்.

News November 12, 2024

சென்னை இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 12, 2024

முதல்வரை சந்தித்த நடிகர் எஸ்வி சேகர்

image

எஸ்.வி.சேகர் தனது 7 ஆயிரமாவது நாடக விழாவிற்கு தலைமையேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதன்பிறகு பேசிய “எஸ்.வி. சேகர், இனி தான் பாஜகவில் இல்லை. இனி நான் அரசியலில் ஈடுபட போவதில்லை. எல்லோருக்கும் நண்பனாக, ஒரு இந்தியனாக, ஒருதமிழனாக, ஒரு திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

News November 11, 2024

மாநகராட்சி கழிவறையில் மது விற்ற 2 பேர் கைது

image

மயிலாப்பூர் பகுதியில் மாநகராட்சி கழிவறையில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தீவிரமாக கண்காணித்த போலீசார், பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 450 மது பாட்டில்களை கைப்பற்றினர்.

News November 11, 2024

சென்னையில் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழகம் நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னையில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News November 11, 2024

தமிழகத்தை விளையாட்டில் முன்னேற்ற முக்கியத்துவம்

image

நேரு விளையாட்டு அரங்கில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாக்குவோம். விளையாட்டு துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

News November 11, 2024

சென்னையில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை

image

சென்னையில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சோலார் பேனல் தயாரிக்கும் ஒ.பி.ஜி. பவர் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடைபெற்றது. மேலும் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம், ஆர்.எ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

News November 11, 2024

சென்னையில் இன்றைய மருத்துவ முகாம்

image

சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று, பொது மருத்துவம் திருவெற்றியூர், மாதவரம், புழல், ஒரகடம், சாந்தோம், சைதாப்பேட்டை, அயனாவரம் போன்ற பகுதிகளிலும், பல் மருத்துவம் மணலி பகுதியிலும், இ என் டி கிழக்கு கடற்கரை சாலையிலும், தோல்நோய் மருத்துவம் செம்பியம், மணலி, எம் எம் டி ஏ போன்ற இடங்களிலும் இன்று மாலை 4.30 முதல் 8.30 வரை நடைபெற உள்ளது.

error: Content is protected !!