Chennai

News January 25, 2026

சென்னை: டிகிரி போதும்-அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

சென்னை இளைஞர்களே செம வாய்ப்பு!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

News January 25, 2026

சென்னை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

சென்னை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “<>TNEB <<>>Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 25, 2026

சென்னை: 5 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு

image

குடியரசு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளனர். முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை; உழைப்பாளர் சிலை பகுதி மற்றும் ஆளுநர் மாளிகை முதல் மெரினா கடற்கரை வரை சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளனர். சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News January 25, 2026

சென்னை: 11 வயது சிறுமியிடம் அத்துமீறல்!

image

சென்னை பெரம்பூரில் மளிகைக் கடைக்குச் சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் (48) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவிள்ளிக்கேணி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். கைதான ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 25, 2026

சென்னை: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News January 25, 2026

சென்னை: திருடிய வண்டியிலேயே தொழில் செய்த நபர்!

image

சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் மகேஸ்வரன் ஆட்டோவை திருடிய பிரேம்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். தி.நகர் பகுதியில் வாகன சோதனையின்போது பிடிபட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வாரமாக திருட்டு ஆட்டோவில் சவாரி ஓட்டி, அதில் கிடைத்த வருமானத்தில் மது குடித்துவிட்டு ஆட்டோவிலேயே தூங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை கைது செய்த சிறையில் அடைத்தனர்.

News January 25, 2026

சென்னை: வீட்டில் பாலியல் தொழில்!

image

சென்னை வளசரவாக்கத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த பகுதியில் சோதனை செய்த போது, வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கு சென்று பாலியல் தொழில் நடத்திய காயத்ரி (31) என்பவரை கைது செய்த போலீசார், 4 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 25, 2026

சென்னை: விமானத்தில் நடுவானில் உயிரிழப்பு

image

பிஜியில் வசிக்கும் இந்தியரான சதாசிவன், தனது மனைவி நளினி ரஞ்சனி தேவியை சிகிச்சைக்காக சென்னை அழைத்து வர முடிவு செய்தார். இதற்காக இருவரும் அங்கிருந்து, மலேசியா வந்து, மலேசியன் ஏர்லைன் மூலம் சென்னை வந்தனர். அப்போதுநளினி ரஞ்சினிக்கு நடுவானில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை சென்னை விமான நிலைய போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரிக்கின்றனர்.

News January 25, 2026

சென்னை: வீட்டில் பாலியல் தொழில்!

image

சென்னை வளசரவாக்கத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த பகுதியில் சோதனை செய்த போது, வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கு சென்று பாலியல் தொழில் நடத்திய காயத்ரி (31) என்பவரை கைது செய்த போலீசார், 4 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!