Chennai

News November 14, 2024

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

image

சென்னையில், லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். போயஸ் கார்டன், தியாகராய நகர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனைக்கு பிறகு, தகவல்கள் தெரிவிக்கப்படும்.

News November 14, 2024

சாலை பாதிப்பு குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்

image

தற்போது வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சாலைகளில் மழைநீர் தேக்கம், சாலை பாதிப்பு உள்ளிட்ட பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சாலை பாதிப்புகள் குறித்து புகார் அளிக்க 93817 38585, 99520 75411 என்ற வாட்ஸ் அப் எண்களை நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

News November 14, 2024

சென்னையின் சிறப்பு மருத்துவ முகாம்

image

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் தினந்தோறும் மாலை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களானது, தினம்தோறும் மாலை 4:30க்கு தொடங்கி இரவு 8:30 மணி வரை நடைபெறுகிறது. தினம்தோறும் நடைபெறும் இந்த முகாமில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் முகாம்கள் குறித்த விபரம் மேலே உள்ளது.

News November 14, 2024

தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்து ஏற்பாடு

image

பௌர்ணமி, வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை காரணமாக, நாளை முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு நவ.15, 16ஆம் தேதிகளில் 705 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு, திருவண்ணாமலை என மொத்தம் 1,152 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News November 14, 2024

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (நவ.14) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நள்ளிரவில் பல இடங்களில் மழை பெய்ததால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் குடை அல்லது ரெயின் கோர்ட் எடுத்துச் செல்லுங்கள்.

News November 14, 2024

சென்னையில் இளைஞர் எரித்து கொலை

image

அசோக் நகரில் உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை எரிந்த நிலையில் இளைஞர் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அசோக் நகர் போலீசார், எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? யார் செய்தது? என விசாரணை நடைபெற்று வருகிறது.

News November 14, 2024

சென்னையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்.

News November 14, 2024

அரையிறுதிக்கு முன்னேறிய மணிப்பூர்

image

எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தேசிய சீனியர் ஹாக்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் கால் இறுதியில், பஞ்சாப் – மணிப்பூர் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. வெற்றி – தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், மணிப்பூர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

News November 13, 2024

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 13, 2024

டாக்டர் மீது தாக்குதல் – தமிழிசை கண்டனம்

image

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது, வேதனை அளிக்கக் கூடியது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது. மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

error: Content is protected !!