India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் பாலின சமத்துவ பேரணி, அண்ணா சாலை, தந்தை பெரியார் சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை நவம்பர் 16 இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அதற்கான போஸ்டரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வெளியிட்டார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
சைதாப்பேட்டையில் நேற்று மாலை உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியம், “மருத்துவர் பாலாஜி சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று யார் சொன்னது? அரசு மருத்துவமனை என்றாலே அங்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற புரிதல்தான் வெளியே வருகிறது. மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். அதைத் தாண்டி சொல்பவர்கள் எதை வேணாலும் சொல்லலாம்” என்று தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி பாலிகிளினிக்குகள் இன்று மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை செயல்படும். இந்த நேரங்களில் சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலே உள்ள புகைப்படத்தில் எந்த இடத்தில் நடைபெறவுள்ளது என்ற தகவல் உள்ளது.
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு திட்டங்களை பெற்றுத் தருவதாகக் கூறி, குழந்தையின் தாயை தி.நகருக்கு அழைத்து சென்ற பெண், தாயை பிஸ்கட் வாங்க அனுப்பிவிட்டு குழந்தையை கடத்திச் சென்றுள்ளர். இதுகுறித்த புகாரின் பேரில், அந்தப் பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. சமீப காலமாக சென்னை மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, தொண்டையில் கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் ஆஸ்பத்திரிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 28 பேர் காய்ச்சலாலும், ஒருவர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் அமைக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு போலீஸ் பூத்திலும் 10 காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். சென்னையில் உள்ள 19 மருத்துவமனைகளில் ஏற்கனவே 9 மருத்துவமனைகளில் காவல் நிலையம், பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்துகள் அமைக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆடவருக்கான 14ஆவது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது நாக்-அவுட் சுற்றை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 3ஆவது கால் இறுதி ஆட்டத்தில், தமிழ்நாடு – உத்தரபிரதேசம் அணிகள் மோதின. இதில், தமிழ்நாடு அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
சென்னையில், லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். போயஸ் கார்டன், தியாகராய நகர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனைக்கு பிறகு, தகவல்கள் தெரிவிக்கப்படும்.
தற்போது வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சாலைகளில் மழைநீர் தேக்கம், சாலை பாதிப்பு உள்ளிட்ட பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சாலை பாதிப்புகள் குறித்து புகார் அளிக்க 93817 38585, 99520 75411 என்ற வாட்ஸ் அப் எண்களை நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் தினந்தோறும் மாலை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களானது, தினம்தோறும் மாலை 4:30க்கு தொடங்கி இரவு 8:30 மணி வரை நடைபெறுகிறது. தினம்தோறும் நடைபெறும் இந்த முகாமில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் முகாம்கள் குறித்த விபரம் மேலே உள்ளது.
Sorry, no posts matched your criteria.