India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறு அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. வடமாநில தொழிலாளியின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தடுக்க முயன்றதால், தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2வயது குழந்தை கொலை செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை இதுவரை போலீசார் கைது செய்த நிலையில், கைதானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், தினேஷ் குமார் மற்றும் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

1.முதலில் <

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ’திமுக ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இன்று பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் 4,000-வது குடமுழுக்கு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் மதவாத அரசியல் செய்வோருக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ஒன் செயலி மூலம் இதுவரை 40லட்சம் டிக்கெட்டுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரயில், மெட்ரோ, பேருந்து போக்குவரத்தை ஒன்றாக இணைக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ‘சென்னை ஒன்’ செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த செயலி மூலம் 40லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்! ஷேர் பண்ணுங்க

சென்னையில் ஒரு மாத குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் உட்பட 8 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காசிமேட்டில் ஒரு மாத ஆண் குழந்தையை 3.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர்கள் திலகாவதி-
சகாயராஜ் தம்பதியினர் முயற்சி செய்துள்ளனர். மேலும், ஏற்கனவே 3 குழந்தை உள்ளதால் விற்பனை செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )
Sorry, no posts matched your criteria.